பக்கம்:துங்கபத்திரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பீரங்கி வீசைக்காரர்கள்‌, வடக்கு முகம்‌ பார்த்து நின்ற பீரங்கி வண்டிகளை கிழக்கு முகமாகத்‌ திருப்பி வைத்துக்‌ கொண்டார்கள்‌.

குதிரை அருகில்‌ வந்து விட்டது; தீப்பந்தம்‌ எல்லோருக்கும்‌ நன்றாகத்‌ தெரிந்தது.

குதிரையின்‌ குளம்படி ஓசை விசுவகாதனுக்குப்‌ பழகிய ஓசையாகத்‌ தெரிந்தது. அவனது குதிரைமீது நின்று அவன்‌ கூர்மையாகக்‌ கவனித்தான்‌. சில வினாடிகளுக்குப்‌ பிறகு அது சக்கரவர்த்தி ராயரின்‌ குதிரை என்பதை அறிந்தான்‌. குதிரை பக்கத்தில்‌ வந்துவிட்டது. தனது எல்லைப்‌ பாதுகாப்பு கடவடிக்கைகளைப்‌ பார்வை இடுவதற்காகவே ராயர்‌ கேரடியாகவே வருவதாகவே விசுவகாதன்‌ நினைத்தான்‌, அந்த நினைப்பு மாறுவதற்குமுன், குதிரை கூடாரத்து அருகே வந்துவிட்டது.

"என்ன விசுவம்‌ பயந்து வீட்டாயா?” என்று குதிரையை வீட்டுக்‌ குதித்தார்‌ அரியநாதன்‌.

"அரியா வந்திருப்பது! அரசரென்றே கருதிவிட்டேன்‌, அரி. நகரத்தில்‌ அமைதிதானே ? அரண்மனையில்‌ ஏதும்‌ குழப்பம்‌ இல்லையே?” –விசவகாதன்‌ சுகம்‌ விசாரித்தான்‌.

எங்கும்‌ அமைதி, எங்கும்‌ சுகம்‌. மதுரையில்‌ ஈமக்கு அமோக வெற்றி! நாகமர்‌ பாண்டியனுக்குப்‌ பதில்‌ அளித்து விட்டார்‌; “சோழன்‌ களத்திலேயே இறந்தான்‌.” —அரிய நாதன்‌ உற்சாகத்தோடு சொன்னான்‌.

விசுவகாதன்‌ சிரித்தான்‌. அவனது அன்னை மங்கம்மாவின்‌ மதிநுட்பம்‌ அவளை இன்பத்திலாழ்த்தி விட்டது. ஒரு கணம்‌ சொப்பனத்திலிருந்து மீண்டான்‌.

“விசுவநாதன்‌, அடுத்த திங்கள்‌ வீஜயககரப்‌ பேரரசின்‌ இரண்டாவது நூற்றாண்டு விழா வருகிறது. , வீழாச்‌ செலவுக்காக மன்னர்‌ பத்து லெட்சம்‌ பொன்‌ ஒதுக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/68&oldid=1524560" இலிருந்து மீள்விக்கப்பட்டது