பக்கம்:துணிந்தவன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 துணிந்தவன் 'அத்தான், உங்களைப் பற்றி யார்யாரோ எவ் வளவோ சொல்கிறார்கள். நீங்கள் ஏன் இப்படி மாறி ஒரீர்கள் . ' காந்திமதி இன்னும் எழுத நினைத்திருந்தாளோ; அல்லது, எழுத்து வேலைக்குத் தடை ஏற்பட்டுவிட்டதோ - புரியவில்லை. கடிதம் அப்படியே முடிந்து போயிற்று. பிறகு, அவசரம் அவசரமாக 'காந்திமதி என்று கிறுக்கி, கவரில் அடைத்துத் தபாலில் சேர்த்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது. மாதவன் பெருமூச்செறிந்தான். இதர கடிதங்களைப் படித்துப் பார்க்க மனம் எழவில்லை அவனுக்கு. நாற்காலி யில் அசைவற்றுச் சாய்ந்திருந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் கை அன்றைய தினசரியை எடுத்தது. அவன் கண்கள் மேலோட்டமாக பத்திரிகையில் அங்குமிங்கும் பாய்ந்தன. அந்த தத்துக்கிளிப் பார்வையில் கூட ஒரு செய்தி அவளைத் தாக்கிவிட்டது. தனது ஊர் செய்தியாக இருக்கவே அவன் அதை வாசித்தான். அது இடி என அதிர்ச்சி தந்தது அவனுக்கு. - சங்கரலிங்கம் பிள்ளையின் மகளும், அம்பல வாணன் என்பவரின் மனைவியுமான காந்திமதி அடுப்பு பற்றவைக்கும் பொழுது அஜாக்கிரதையால் சேலையில் தீ பிடித்துக் கொண்டது. அதன் காரணமாக அவள் உட லெல்லாம் புண்பட்டு, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகப் பட்டாள். அங்கேயே மரணம் அடைந்தாள். அஜாக்கிரதை யால் ஏற்பட்ட விபத்தின் விளைவாக மரணம் சம்ப வித்தது என்று பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினர். மாதவன் அதை மறுமுறையும் வாசித்தான். 'விபத் தின் விளைவா? ... இல்லை. இல்லவே இல்லை. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/108&oldid=923466" இலிருந்து மீள்விக்கப்பட்டது