பக்கம்:துணிந்தவன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 40? “என்னது மீண்டும் ஆச்சர்யம் அவனுக்கு. 'சினிமாவில் நடிக்க....” 'உம்ம்' என்று தலையைச் சொறிந்தான் மாதவன். நான் இங்கே இருக்கிறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டு வைத்தான். ‘என்ன அசட்டுக் கேள்வி இது என்பதுபோல் பேபி சிரித்தாள். 'இது கூடவாத் தெரியாது? உங்களைப் பற்றிய விவரமெல்லாம் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். நீங்கள் நடித்த படங்களை எல்லாம் நான் விடாமல் பார்த்துவிடுவேன். பத்திரிகைகளில் வந்திருக்கிற உங்கள் படங்களை எல்லாம் தேடிப் பிடித்து, ஆல்பத்தில் ஒட்டி வச்சிருக்கிறேன். அது தான் எனக்கு ஹாபி ' என்று உற்சாகமாகக் கூறினாள். . 'பரவால் லியே. எனக்கும் அழகான 'பக்தை ஒருத்தி இருக்கிறான்னு சொல்லு. பேஷ்! அப்புறம்?’’ அவள் மகிழ்வும் நன்றியும் பெருக அவனைப் பார்த்தாள். சிரித்தாள். 'எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்காதீங்க, ஸ்ார். நான் ஜோராக நடிப்பேனாக்கும். எங்க ஸ்கூல் டிராமாவிலே நான் எத்தனையோ வேஷங் களில் நடித்திருக்கிறேனே!" "அதெல்லாம் சரி, பேபி. ஆனால் வந்து....” 'வந்து - போயி என்கிறதெல்லாம் என்கிட்டே வேண்டாம், ஸார். உங்க படத்ததிலே ஒரு சிறு பர்கமாக இருந்தாலும் போதும்....'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/113&oldid=923472" இலிருந்து மீள்விக்கப்பட்டது