பக்கம்:துணிந்தவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9 'என் நினைவிலே இனிமையாய் நிலைத்திருக்கக் கூடிய பெருமை உனக்கு மட்டுமே உண்டு, காந்தி. வறண்ட கோடை போன்ற என் வாழ்க்கையில் உன் அன்புதான் குளிர் தரும் நிழலாக விளங்கியது; இனி உன் நினைவு எனக்குத் துணை நிற்கும்' என்றான் அவன். 'நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே, அத்தா 8. .. و و 'விடிந்தால் தெரியும் வெளிச்சம். நாளைக்கோ, மறுநாளோ, என்றோ எல்லாம் தானாகப் புரிந்துவிட்டுப். போகிறது: 'பெரியவர்கள் எனக்காக நிச்சயித்துவிட்ட கலியானத்தைக் குறிப்பிடுகிறீர்களா?” 'பெரியவர்கள் எப்பவும் இளையவர்களின் நலத்தை உத்தேசித்துத் தான் செயல்புரிவார்கள். அல்லது, அப்படிச் செயல் புரிவதாகச் சொல்கிறார்கள்...." வறட்டுச் சிரிப்பு ஒன்று உதிர்ந்தது அவன் உதடு களிலிருந்து. 'இன்று நீங்கள் என்னவோபோல் பேசுகிறீர்களே, அத்தான்?’’ 'என்றுமே நான் அப்படித்தான் இருந்திருக் கிறேன், காந்தி. ஆனால் உனது உணர்ச்சிப் பெருக்கிலும், இன்ப நினைவிலும், ஆசைக் கனவிலும் உன்னையே மறந்திருந்த நீ என்னை உள்ளது உள்ளபடி அறியவில்லை. நான் வாழத் தெரியாதவன்... வாழ முடியாதவன்...."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/21&oldid=923492" இலிருந்து மீள்விக்கப்பட்டது