பக்கம்:துணிந்தவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r్కగ துணிந்தவன் கால் மணி நேரம் கழிந்திருக்கும். அவர் பல மாகக் கனைத்துக் கொண்டார். திண்ணையின் பக்கம் கண் திருப்பினார். அவனை அப்பொழுதுதான் பார்த்தவர் போல, யாரது அங்கே நிற்கிறது? இப்படி முன்னாலே வா' என்று உத்திரவிட்டார். மாதவன் அவர் எதிரே வந்து நின்றான். அவர் அவனை எடைபோடுவது போல ஏற இறங்கப் பார்த்தார். அவன் தோற்றம் அவருக்குப் பிடித்திருந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எல்லோர் விஷயத்தி லும் உண்மையாகி விடுவதில்லை. குரூர முகம் படைத்த சிலர் நல்ல உள்ளம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கொடிய செயல்கள் புரியும் சிலர் சதா இன்முகத்தோடு தி ரிகிறார்கள். மாதவனின் உள்ளத்திலே நிறைந்திருந்த கசப்பையும் வெறுப்பையும் அவன் முகம் எடுத்துக் காட்டவில்லை. அன்றலர்ந்த செந்தாமரையை அது சிகர்த்திருக்கவில்லை என்றாலும் அதிலே ஒரு குளுமையும் சாத்தமும் நிலவியது. அறிவின் ஆழமும் அனுபவமும் ஒருவாறு பெற்றிருந்த அவன் கண்களில் விசேஷ ஒளி கனன்று கொண்டிருந்தது. - - 'உ.ம். உன்னை எப்படி நம்புகிறது? ' என்று கேட்டார் அவர். - "என்னை நம்புவதும் நம்பாமலிருப்பதும் உங்கள் மனசைப் பொறுத்தது. பத்திரிகையில் விளம்பரத்தைப் பார்த்தேன். அந்த வேலையை என்னால் சிறப்பாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அத னால் வந்தேன்' என்று மாதவன் சொன்னான். பவானந்தம் அவனைக் கூர்ந்து நோக்கினார். 'நீ இன்னார், இப்படிப்பட்டவன் என்று தெரியாவிட் டாலும், உன்னைப் பற்றி எனக்குத் தெரிந்தவர்கள் எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/34&oldid=923506" இலிருந்து மீள்விக்கப்பட்டது