பக்கம்:துணிந்தவன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பழம்பெரும் முற்போக்கு எழுத்தாளர் இலக்கியச் செல்வர் திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் சிறந்த படைப் பான "துணிந்தவன்” என்ற இந்த நாவலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள அப்பெரியாரின் வாழ்க்கைக் குறிப்பு அவரது எளிமையான வாழ்க்கையையும் அவரது மகத்தான இலக்கிய சாதனைகளையும் எடுத்துக் கூறுகிறது. பல விருதுகளைபெற்றுள்ள திரு. வல்லிக்கண்ணன் தன்னடக்கத்திற்குப் பேர் போனவர். விளம்பரத்தைக் கொஞ்ச மும் விரும்பாத்வர். வயது வித்தியாசமின்றி எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர். இளம் எழுத்தாளர்களை ஊக்கு விப்பவர். 81 வயதிலும் இளைஞருக்குள்ள சுறுசுறுப்புடன் தமது இலக்கியப் பணியை ஆற்றி வருகிறார். நல்ல வாழ்க்கை நெறிகளைக் கைவிட்டு, பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பவர்களின் வாழ்க்கை எவ்வாறு முடியும் என்பதைச் சித்தரிக்கிறது 'துணிந்தவன்'. கலாசாரச் சீர்கேடும், நேர்மையின்மையும், ஊழலும் நம் நாட்டில் பெருகி வரும் இன்றைய சூழலில், இப்போக்கு களைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளுக்கு இந்த நாவல் உதவும். நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் தரும் ஆக்கப் பணிகளில் ஈடுபட இளைஞர்களை தட்டியெழுப்பும் என. உறுதியாக நம்பலாம். இந்த நாவலை வெளியிட அன்புடன் அனுமதித்த நூலாசிரியருக்கு எங்களின் உளமார்ந்த நன்றி. சிறந்த முற்போக்கு ஏடு சரஸ்வதியில் 1959-ம் ஆண்டு இந்த நாவல் முதலில் வெளிவந்தது. முற்போக்கு இலக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/5&oldid=923523" இலிருந்து மீள்விக்கப்பட்டது