பக்கம்:துணிந்தவன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 துணிந்தவன் அபிப்பிராயங்களை எல்லாம் ஒரு புத்தகமாக்க எண்ணி யிருக்கிறேன். என் பெயரை நிலைநாட்டக்கூடிய மாபெரும் நூலாக மானுமென்ட்டல் ஒர்க் ஆக விளங்கும் அது. எந்த விஷயத்தையும் அல்பம் என்று நான் ஒதுக்கிவிடுவ இல்லை. சிறு விஷயத்திலே கூடப் பெரிய பெரிய உண்மைகள் வெளிப்படலாம் என்றார். "ஆமாம், வாஸ்தவம் தான்' என்று தலையாட்டி ாைன் மாதவன். 'தின்பண்டங்களைப் பற்றி நீ எண்ணிப் பார்த்தது உண்டா?" என்று கேட்ட பவானந்தம் அவன் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. சுவையான பேச்சை ஆரம்பித்தார். 'பார்க்கப்போனால் முக்கால்வாசி தின்பண்டங் கள் - தமிழ் நாட்டின் வீடுகளிலும் ஒட்டல்களிலும் தயாரிக்கப்படுகிறவை தான் - தமிழ் நாட்டிலேயே கண்டு பிடிக்கப்பட்டவை அல்ல. அவை வெளிப் பிரதேசங்க விலிருந்து வந்தவை. இனிப்புப் பதார்த்தங்கள் எல்லாம் அநேகமாக வட நாட்டிலிருந்து இறக்குமதியானவை தான். அல்வா, ஜிலேபி, ஜாங்கிரி, மைசூர்பா, குளோப் ஜான்..... பார்த்தியா, பேர்களே சொல்லவில்லையா இவை தமிழ் நாட்டுச் சரக்குகள் இல்லை என்று, லட்டு... லட்டு கூட வெளியே இருந்து வந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை அப்பம் - ஐ மீன் தேட் அதிரசம் ... தான் தமிழ் நாட்டிலேயே பிறந்தது. தென், தேட் பொரி உருண்டை...." 'பூந்தி?” என்று கேட்டு வைத்தான் மாதவன். 'பூந்தி?..., உ.ம்ம். பூந்தி.... யோசிக்க வேண்டிய விஷயம் தான்' என்று கூறி மோவாயைத் தடவினார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/54&oldid=923528" இலிருந்து மீள்விக்கப்பட்டது