உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 துணிந்தவன் அவர் ஏன் பாராட்ட மாட்டார்?’ என மாதவன் நினைத் தான்; வாய் திறந்து சொன்னானில்லை. பெரியவர் தெரிவித்தார். இதை எல்லாம் நான் உன்னிடம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; எனக்குத் தமிழ் அவ்வளவாக எழுத வராது. நான் என் ஐடியாவை அப்படி அப்படியே குறித்து வைத்திருக்கிறேன். அவற்றை ஒழுங்குபடுத்தி அமைத்துத் தருகிறேன். நீ அதை நல்ல தமிழிலே எழுதணும். அவ்வளவு தான். ' 'அந்த வேலை எல்லாம் எனக்குப் பிடிக்காதய்யா. வேறு ஆளைப்பாரும் என்று சொல்லிவிடலாம் என மாதவன் துடித்தான். இருப்பினும், 'இவர் இப்பவேயா குறிப்புகளை எழுதிவிடப் போகிறார்? இவருக்கு இயல் பாக உள்ள சோம்பல் இவரை லேசில் விட்டுவிடுமா உரிய காலத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொன்னால் போச்சு என்று தன்னையே அடக்கிக்கொண் டான் அவன். 'இ ஹி ஹி, அதுக்கென்ன!' என்று இழுத் த#ன. - இந்தச் சமயத்தில் ஒரு வேலைக்காரன் வந்து, 'அம்மா கூப்பிடுறாங்க என அறிவித்ததால் பவானந்தம் வீடு நோக்கிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாதவனைத் தேடிக்கொண்டு பாலச்சந்திரனும் பேபியும் வந்தார்கள். நல்ல வேளை என்று மகிழ்ந்தான் அவன். |HG பூரீமதி பவானந்தம் ஆகிய விசாலாட்சி அம்மாளை அடிக்கடி காணும் பாக்கியம் மாதவனுக்குக் கிட்டவில்லை. அதற்குக் காரணம் அவ்வம்மையார் எழுந்து நடமாடும் சுபாவம் பெற்றிராததேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/56&oldid=923530" இலிருந்து மீள்விக்கப்பட்டது