பக்கம்:துணிந்தவன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5? கண்கள் ஒளிர்ந்ததும் கனஜோராக இருந்தன. மாதவன் ரசித்து மகிழாம்லா நிற்பான்? "சரி. ஏறிக்கொள்ளுங்கள்' என்று, தனக்குப் பக்கத் தில் உள்ள கதவைத் திறந்தாள் அழகி. அவனும் ஏறி ஜம்மென்று அமர்ந்து கொண்டான். கார் வெறும் பாதையில் செல்வதாகத் தோன்றவில்லை அவனுக்கு. இன்ப யாத்திரையில் மனோகரமாகச் செல் லும் ரதத்தில் உல்லாச மோகினியோடு மிதந்து போவது போலவே இருந்தது. அன்று அவனுக்கு நல்ல நாள்தான். ஆனந்தமும் இன்பமும் திகட்டக் கூடிய அளவுக்கு அளித்துத் தானும் மகிழ்ந்தாள் வசந்தா. * தனது இடத்துக்குத் திரும்பிய மாதவன் 'லட்சியப் பாதையில் மற்றுமொரு மைல் முன்னேறி விட்டோம். நமது திட்டத்திலே மேலும் ஒருபடி உயர்ந்து விட்டோம்" என்று எண்ணி, மிகுந்த குதுகலம் அடைந்தான். HH வசந்தாவின் நட்பு ஏற்பட்டதிலிரந்து மாதவன் வாழ்வில் அதிகமான பசுமை பூக்கலாயிற்று. அவள் அவ னுக்கு இன்பம் அளித்தாள் அவ்வப்போது இனிய உணவு தந்தாள். உற்சாகம் மிகுந்தபோது, தனது ஞாபகார்த்த மாக இருக்கட்டும் என்று பவுண்டன் பேனாவும், ஸில்க் கைக்குட்டையும் ஜோரான சட்டையும் உவந்தளித்தாள். செலவுக்குப் பணமும் கொடுத்தாள். அவள் கணவன் ஏதோ பெரிய உத்தியோகம் பார்த்து வந்தார். அவர் உயரமாய், பருமனாய், தொந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/63&oldid=923538" இலிருந்து மீள்விக்கப்பட்டது