பக்கம்:துணிந்தவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - துணிந்தவன் வயிறும் மந்த குணமும் பெற்றவராய்க் காணப்பட்டார். எப்பொழுதும் வேலை மீதும், பணம் பண்ணுவதிலுமே கருத்தாக இருந்தார். அதனால் அவர் மனைவி பொழுது போக்குக்கும் உல்லாசத்துக்கும் இளைஞர்களை நாடிய தில் விசித்திரம் எதுவுமில்லை. தனக்குக் கிடைத்த புதிய சிநேகிதியின் குணாதிசயங் களைப் பற்றி மாதவன் வெகுவாகக் கவலைப்பட வில்லை. இன்று அவளுக்கு என்மீது பிரியம் ஏற்பட்டிருக் கிறது. அதேபோல் திடீரென்று அவள் அன்பு வற்றிப் போகலாம். அதைப் பற்றி எல்லாம் நான் வீணாக எண்ணி என் மனசைக் குழப்பிக் கொள்வானேன்? நிகழ்காலம் இனிய பசுமை பெற்றதாகத் திகழ்கிறது. அதுபோதும் என்றே அவன் கருதினான். - அவன் பவானந்தம் விட்டுக்கு வந்து ஆறே ழு, மாதங்கள்ஆகியிருக்கலாம். வரவர அந்தச் சூழ்நிலையும்: அங்குள்ள மனிதர்களும் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்துவ தாகவே அவன் நினைத்தாள். தனது லட்சியப் பாதையில் மேலும் முன்னேற வேண்டுமே யல்லாது. தேங்கி நிற் பதைத் தான் விரும்புவதற்கில்லை என்று அவன் மனக் குறளி முனங்கியது. ஆகவே அந்த இடத்தை விட்டு வெளி யேறுவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை அவன் நோக்கியிருந் த#ன. ஒரு நாள், விரும்பத்தகாத - அதாவது, பவானந்தம் வீட்டாரின் நோக்கிலேதான் - நிகழ்ச்சி ஒன்று நடந்து விட்டது. பாலச்சந்திரனுக்கும் வேறொரு சிறுவனுக்கும் சண்டை பிறந்தது. அந்தப் பையன் வெளியே எங்கிருந்தோ வந்து இந்த வீட்டுக் காம் பவுண்டுச் சுவர் மீது ஏறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/64&oldid=923539" இலிருந்து மீள்விக்கப்பட்டது