பக்கம்:துணிந்தவன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 உட்கார்ந்திருக்கிறான். பாலுதான் அவனை முதலில் பார்த் தான். 'ஏய் திருட்டுப்பயலே, இறங்கிப்போடா!' என்று கூவினான். அந்தச் சிறுவன் பற்களைக் காட்டினானே தவிர, பயப்பட்டானில்லை. போடாங்கிறேன். நீ என்னடா இளிக்கிறே? ஒடிப்போறியா, இல்லே...' என்று மிரட்டி னான் பாலு. 'நீ சாப பிடுவ, போடா பொட்டைப் பையா!' என்று கத்தினான் சுவர்மேல் இருந்தவன். 'திருட்டு ராஸ்கல்! இதோ பாரு' என்று சொன்ன பாலு, கால் சட்டைப் ன்பயிலிருந்து 'கேட்டாபுல்ட்" டை எடுத்தான். சிறுகல் ஒன்றை எடுத்து, குறி பார்த்து அந்தப் பையன் மண்டையை நோக்கி அடித்தான். கிண்ணென்று பறந்துசென்ற கல் சரியானபடி தாக்கியது சிறுவனின் நெற்றியில். அவனுக்கு ஆத்திரம் வந்தது. அவன் உள்ளே குதித்து, ஒடிவந்து பாலச்சந்திரனைத் தாக்கினான். இவனும் தாக்குப்பிடிக்க முயற்சித்தான். ஆனால் வந்தவனோ முரடன். தெருப்பையன்களோடு சண்டையிட்டுத் தேர்ந்த வன். அவன் கைகளில் பாலு சிக்கிக்கொண்டு திண்டாடி னான். தோட்ட வேலைக்காரன் கவனித்து ஓடிவந்தான். அவன் வருவதைப் பார்த்ததுமே, முரட்டுப்பயன் பாய்ந்து ஓடி, சுவரேறிக் குதித்து மாயமாய் மறைந்துவிட்டான். அடிபட்ட பாலசந்திரன் தரையிலிருந்து எழுந்து உடம்பிலும் கால் சட்டையிலும் படிந்திருந்த புழுதியைத் தட்டுவதில் முனைந்தான். அயோக்கியப்பயல் ரோஜாச் செடியைத் திருடிக்கொண்டு போகத்தான் வந்திருப்பான்' என்று அவன் முணுமுணுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/65&oldid=923540" இலிருந்து மீள்விக்கப்பட்டது