பக்கம்:துணிந்தவன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 துணிந்தவன் எதெதற்கெல்லாமோ உதவினான். புரடக்ஷன் மானேஜருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தான். முக்கிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நல்லவனாக விளங்கினான். எல்லோ ருக்கும் அவனைப் பிடித்துவிட்டது. படாதிபதிக்கு அவனை ரொம்ப ரொம்பப் பிடித்தது. “மாதவன், நீயும் ஒரு ஆக்டிலே வந்து பாரேன்!” என்றார். 'என்னாலே என்னங்க நடிக்க முடியும்!” என்று தலையைச் சொரிந்தான் அவன். 'ஒவ்வொருவனும் ஒரு நடிகன்தாம்ப்பா. அதை வளர்க்காததனாலே அது வீணாகிவிடுது. நீ சும்மா நடி தம்பி!' என்று உற்சாகப்படுத்தினார் முதலாளி. சும்மான்னா காசில்லாமே என்கிறதுக்குச் சொல்லலே அப்பேன்! பணம் தராமல் இருப்பேனா?” என்று ஹாஸ்யமும் பண்ணினார். அவனும் துணிந்து நடிக்க இசைந்தான். கதையில் தனக்கு ஏற்றமுறையில் ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்துக் கொண்டான். சினிமா உலக நியதிப்படி விடிவெள்ளி புரடக்ஷன் வின் படம் அவசரமில்லாமலே வளர்ந்து ஒரு மாதிரி படமும் வந்தது. வெற்றியும் பெற்றது. மாதவனைப் பாராட்டுவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். மாதவன் வசந்தாவை சந்தித்துவந்தான் என்றாலும், வரவர அவள் விலகிச் செல்வதுபோன்ற உணர்வு அவ னுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்காக அவன் கவலை கொள்ளவு மில்லை. அவளுக்குப் புதிய நண்பன் எவனாவது கிடைத் திருக்கலாம் என்று எண்ணினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/78&oldid=923554" இலிருந்து மீள்விக்கப்பட்டது