பக்கம்:துணிந்தவன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 துணிந்தவன் 'போயும் போயும் நீ கூத்தாடியாக மாறுவேன்னு யாரும் எண்ணவேடே நீ சொல்லாமப் புரியாமே வீட்டை விட்டு, ஊரைவிட்டு ஒடிப்போனதும், எங்காவது குளத்தி லேயோ இல்லே ரயிலடியிலேயோ விழுந்து செத் திருப்பே அப்படீன்னு நெனச்சோம். பிறகு ஒருநாள் திடீர்னு நம்ம ஊர்க்காரன்லாம் உன்னைப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டானுக. ஏதோ ஒரு படத்தப் பார்க்கப் போன பயலுக, ஏய் நம்ம மாதவன்லா அது இன்னு கத்திவிட் டானுக. அவனுக வந்து ஊரு பூராவும் தமுக்கடிக்க... அப்புறம் இருந்தான்குடியா எல்லோரும் அந்தப் படத்தைப் பார்க்கப்போக... ' 'நீங்களும் பார்க்கப் போனtங்களா இல்லையா? : என்று குறுக்கிட்டான் மாதவன். 'போனேன் போனேன்.” 'பின்னே என்ன பேச்சு வாழுது விட்டுத் தள் ளுங்க!' என்று சொல்லிச் சிரித்தான் அவன். 'என்ன இருந்தாலும் மாதவா, இது நம்ம குடும்ப அந்தஸ்துக்கு அடுக்குமா? உன் தாத்தா வாழ்ந்த வாழ் வென்ன? உன் அப்பா - அவுக... அடா அடா, ராஜா மாதிரி போடுபோடுன்னு வாழ்க்கை நடத்தினாக. அவுக பேரைக் கெடுக்கிற மாதிரி c. - * சரிதான் நிறுத்தும். வீணாக வாயை மேய விடாதியும்' என்றான் அவன். சங்கரலிங்கம்பிள்ளை அசந்துபோய்விட்டார். அப் படியே மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவாரோ என்று கூடத் தோன்றியது. தன்னை - மரியாதைக் குறைவாக எவனுமே பேசத்துணியாத, தன் முன்னாலேயே ஒருவன் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/82&oldid=923559" இலிருந்து மீள்விக்கப்பட்டது