பக்கம்:துணிந்தவன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 69 'என்னடே, நீ தானா! ஆளே ஒரே அடியா மாறிப் போயிட்டியே' என்று பல்லெல்லாம் காட்டிப் பேசினார். மாதவன் அவரைப் பார்த்தான். இறந்த காலத்தின் சாயை தன் முன்முளைத்து - நிற்கிறதே என்ற வியப்பு பிறந்தது அவனுக்கு. சில வருஷங்களுக்கு முன்பு அவன் அளவிட முடியா அன்பு செலுத்திய காந்திமதியின் தந்தை சங்கரம்பிள்ளைதான் அவர். பட்டணத்துக்கு ஏதோ கேஸ் விஷயமாக வந்திருந்தார். தற்செயலாக அவனைக் கண்டு விட்டார். 'ஆமாம். மாறாமல் எப்படி இருக்கமுடியும்? மாறுதல் வளர்ச்சியின் அறிகுறிதானே!" என்றான் மாதவன். 'மாட்டு வால் வளர்ச்சியாக இருந்தாலும் சரி தானே? என்று கிண்டலாகக் கேட்டார் பிள்ளை. 'என்னது? வெடுக்கென்று தெறித்தது அவன் கேள்வி. 'மாட்டு வாலும் வளரத்தானே செய்யுது? கீழ் நோக்கி! அதைத்தான் சொன்னேன்' என்றார் பிள்ளை. மாதவன் அதை அலட்சியப்படுத்தக் கருதி, பேச்சை மாற்றினான். 'காந்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?’ என்று விசாரித்தான். 'ஒ: இரண்டு குழந்தைகள் கூட இருக்கு என்று பெருமையாகச் சொன்னார் அவர். 'ரெண்டு பிறந்துவிட்டதா? பேஷ்பேஷ்! அப்ப அவளுக்குக் குறை எதுவும் இராதுதான்! அவன் குரலில் பரிகாசம் தொனித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/81&oldid=923558" இலிருந்து மீள்விக்கப்பட்டது