பக்கம்:துணிந்தவன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 துணிந்தவன் எனவே, அவனுக்கும் அவனோடு உழைத்தவர் களுக்கும் நல்ல வெற்றி, பனமும் புகழும் தாரளமாக வந்து குவிந்தன. ஐம்பதாவது நாள். நூறாவது நாள்... இருபத்தைந்தாவது வாரம் என்று வெற்றிவிழா ஊர் தோறும் கொண்டாடப்பட்டது. விழா நிகழும் ஊருக் கெல்லாம் மாதவனும் குமாரி சம்பாவும் விஜயம் செய் தார்கள். ஆரவாரமான வரவேற்பு பெற்றார்கள். மாதவன் 'மகோன்னதமான இரண்டாவது படம் தயாரிப்பதில் ஈடுபட்டான். இடைக்காலத்தில் ஜோரான பங்களா ஒன்றும் கட்டிமுடித்தான். அதில் சகல வசதிகளும் திரம்பியிருந்தன. அழகு அம்சங்களும் கலைநயத்துடன் சேர்க்கப்பட்டிருந்தன. வாழ்வது என்றால் இவ்வாறு வாழ்க்கை நடத்துவது அல்லவா வாழ்வு' என்று அவன் எண்ணி எண்ணி மகிழ்ந்தான். சம்பாவுக்குப் பெருமை யாவது பெருமை! அவளும் அந்த வீட்டிலேயே வசித்தாள் ராணி மாதிரி வாழ்ந்தாள் அவள். ராஜா மாதிரி வாழவேண்டும். என்று ஆசைப் பட்டான் மாதவன். ராஜா மாதிரி என்ன? ராஜாவாகவே வாழலாம். இக்காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் தான் அப்படி வாழமுடியும். நாம் துணிந்து வழிகாட்டலாமே!’ என்று துண்டியது அவன் மனம். எண்ணியதை எண்ணியபடி செய்துமுடிக்கும் வசதி கள்தான் அவனிடம் இருந்தனவே! ஆகையால் அனை வரும் பிரமிக்கத்தக்க வகையில் செயல் புரிந்தான் அவன். புராதன ரோம் நாட்டின் பிரமுகர்கள் அணிந்தது போன்ற அங்கியும், அதன் மீது துவண்டு தொங்கிக் கிடக்கும் டோகா வும் தயாரித்துக் கொண்டான் மாதவன். அங் கங்கே மின்னும் பொன் ஜரிகை வேலைகள் செய்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/86&oldid=923563" இலிருந்து மீள்விக்கப்பட்டது