பக்கம்:துணிந்தவன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 85 மாதவன் பார்வை சுவர் மீதெல்லாம் மேய்ந்தது. சில போட்டோக்கள் தொங்கின அங்கு. அவற்றில் சில முன்பு கார் ஒட்டிவந்த உல்லாசியை, மாதவனைப் பழித்த ஆசாமியை - நினைவு படுத்தின. 'வீட்டை நன்றாகப் பாருங்கள்!' என்று அவள் அவனுக்கு ஒவ்வொரு அறையையும் காட்டினாள்: அலங் காரப் பொருள்களும், ஆடம்பரச் சாமான்களும் தாராள மாகவே தென்பட்டன அறை தோறும். 'மாடிக்குப் போகலாம் வாங்க என அவள் அவ னுக்கு வழிகாட்டினாள். மாடி அறைகளும் ஜோராகத் தான் இருந்தன. ஒரு இடத்தில், அவனுக்கு அறிமுகமாகி யிருந்த நபரின் பெரிய படம் ஒன்று எடுப்பாக விளங் கியது. 'இவர்தான் உங்கள் கணவரா?' என்று விசாரித் தான் மாதவன். 'அப்படியும் சொல்லலாம்' என்று புன்னகை யோடு கூறினாள் ஜெவந்தி. அவன் விழித்தான். அவள் சிரிப்பு அதிகமாயிற்று எனக்கு புரியவில்லை என்றான் அவன். இவள் அவனுடைய காமினியாக இருக்கலாம் என முதன்முதலிலேயேதான் சந்தேகித்தது மாதவனுக்கு நினைவு வந்தது; அவ் விஷயத்தை அவன் அப்படியே விட்டுவிட்டான். அவள் ஒரு அறையைத் திறந்தாள். சிறிய அறை தான் அது. எனினும் மிக மனோகரமாக இருந்தது. 'கம் மென்று ஒரு வாசனை அங்கு நிறைந்து நின்றது. பெரிய கட்டில் ஒன்று நேர்த்தியான வேலைப்பாடுகள் உடையது அந்த அறையின் பெரும்பகுதியை அடைத்துக் கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/97&oldid=923575" இலிருந்து மீள்விக்கப்பட்டது