பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தும்பைப் பூ


இதற்குள் மாட்டு வண்டி வீட்டை நெருங்கி விட்டது. மக்கையின் கண்கள் பரபரப்போடு வண்டியினுள் பார்த்தன. உள்ளே உட்கார்ந்திருப்பது சிவகுமாரன் தான் என்பது அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. ஆனால் அவன் முகம் வாட்டமாயிருப்பதைக் கண்டு அவள் கலவரமடைந்தாள். 'என்னவோ ஏதோ!' என்று எண்ணி அவளுடைய உள்ளம் ஏங்கியது. நான் சென்னையிலிருந்து வந்து ஒரு வாரங்கூட ஆகவில்லை; அதற்குள் அங்கிருந்து ஆள் வந்திருக்கிறதென்றால்? அதுவும் மனவருத்தத்துடன் வந்திருப்பதைக் கவனித்தால்? பாட்டணத்திலிருந்து வந்திருப்பது வேறு யாருமில்லை. அக்காவின் பெரிய பிள்ளையே வந்திருக்கிமுன். என்ன விஷயமா யிருக்கும்? ஒருவேளை என்னைக் கூப்பிட்டு வரச் சொல்லி அனுப்பியிருப்பார்களோ? அத்தான் சொல்லியனுப்பி யிருப்பாரோ? அக்கா சொல்லி அனுப்பி யிருப்பாரோ? அக்கா விருப்பத்துக்கு மாறாக அத்தான் கூறியனுப்பி இருக்க முடியாது. அக்காவேதான் கூறியனுப்பியிருக்க வேண்டும். என்மீது வெறுப்புக் கொண்டு வீட்டை விட்டு விரட்டியடித்த அக்கா என்னைக் கூட்டி வரச்சொல்லி அனுப்பியிருப்பாளா? நான் பிரிந்து வந்தபின் அக்கா என்மீது கொண்ட கோபம் மாறி......' மங்கையின் மனத்தில் ஒரு சில விநாடிகளில் இப்படிப் பல எண்ணங்கள் தோன்றின.

"வா சிவா, ஊரிலே அம்மா, அப்பா எல்லாம் சுகமா?" என்று சிவகாமியம்மாள் கேட்டு வரவேற்பது உணர்ந்து மங்கை நினைவுகளிலிருந்து விடுபட்டு, சிவகுமாரனை வரவேற்க எதிர்கொண்டு போனாள்.

இதற்குள் சிவகுமாரன் வண்டியை விட்டு இறங்கிப் படுக்கை பெட்டிகளை எடுத்து வைக்கச் செய்தபின், வண்டிக் காரனுக்குச் கூலி கொடுத்து அனுப்பிவிட்டு வந்தான்.

மங்கை பெட்டி படுக்கைகளை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, "நேரே பட்டணத்திலிருந்து தான் வருகிறாயா, சிவா?...." என்று கேட்டுக் கொண்டே சிவகுமாரனை