பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தும்பைப் பூ


இக்கேள்வி திலகவதியை சட்டி கொண்டு குத்துவது போல் இருந்தது. தான் சண்டை போட்டு அவனை அனுப்பி விட்டதாகவே, கணவனிலிருத்து பிள்ளைகள்வரை அனைவரும் எண்ணியி கப்பதை அவர்களுடைய ஒவ்வொரு பேச்சிலிருந்தும் அவள் உணரலானாள். 'அவர்கள் எண்ணுவதென்ன! உண்மையும் அதுதானே? தான் மங்கையைப் பற்றித் தவறான எண்ணங் கொண்டு எடுத்ததற்கெல்லாம் அவள்மீது சிடுவென சரிந்து விழுந்தும் வாயில் வந்தவாறு பேசியும் தொந்திரவு கொடுத்து வந்ததால் தான், இந்த ஒருவினை தாங்காமல் அவள் போய்விட்டாள்' என்று திலகவதியின் மனம் ஒப்புக்கொள்ளத்தான் செய்தது. இந் நிலையில், மங்கை இங்கு மீண்டும் திரும்பி வருவாளா என்பது இவளுக்கும் சந்தேகமாய்த்தானிருந்தது. ஆனாலும் இவள் ஐயப்பட்டதையே கணவன் கேட்டபோது இவருக்குக் குற்றமாகப்பட்டது. தான் மங்கை விஷயத்தில் அநியாயமாக நடந்து கொண்டதாகச் சுட்டிக் காட்டவே, கணவன் இவ்விதம் கேட்டதாக எண்ணி மனம் வருந்தினாள்.

கணேசன் நிமிஷத்துக்கு ஒருதரம், 'சித்தி! சித்தி' என்று அரற்றுவதைக் கேட்டுவிட்டு, பக்கத்து வீட்டுப் பெரியம்மா, இவனுக்கு உடம்பாலுற்ற நோய் ஒன்றுமில்லை, திலகம்! பங்கையின் கவனமாய் இருக்கிறான் இவன், அவள் வரட்டும், பார், இவன் உடனே எழுந்து விளையாடுகிறனா இல்லையா என்று?' என்று கூறி, மங்கையை உடனே வரச் சொல்லி அழுது! இல்லாவிட்டால் ஆளையனுப்பிக் கூட்டி வரச் சொல், தான் சொன்னது சரியா இல்லையா அப்புறம் சொல்வேன்' என்று சொல்லிய யோசனை மீதுதான் அவள் கணவனிடம் கூறி மூத்த மகனை அனுப்பி வைத்தாள். பிள்ளைக்கு இப்படி இருக்கிறதே என்ற தாபத்தால், அவள் அப்படி மங்கையை அழைத்துவரச் சிவகுமாரனை அனுப்பினாளே யொழிய, அடுத்த கணத்திலே அவள், 'ஏன் அனுப்பினோம்? கூப்பிட்டதற்கு மதிப்புக் கொடுத்து மங்கை வராமல் போய்விட்டால், முகத்தில் கரியைப் பூசிக்கொண்டது