பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

111


அழைத்த கோகிலாவுக்கு வாய்மீது விரலை வைத்துப் பேசாமலிருக்குமாறு விசுவநாதன் குறிப்புக் காட்டினான். ஆதலால், அவள் அத்துடன் பேச்சை நிறுத்தி, மங்கையைச் சேர்த்து அணைத்தவாறு அழைத்துப் போகலானாள்.

"குழந்தை எங்கே இருக்கிறான், கோகிலா!......" எனக் கேட்டுக்கொண்டே போன மங்கை வழியில் திலகவதி நின்றிருப்பதைக் கண்டு, "அக்கா, கணேசனுக்கு உடம்புக்கு என்ன? எனக்கு முன்னமே சொல்லியனுப்பக் கூடாதா?......" என்று துக்கந் தொண்டையை அடைக்கக் கேட்கலானாள்.

மங்கையைக் கண்டதுமே, அவள் முகத்தில் எப்படி, விழிப்பது என்று வெட்கத்தால் உடல் குன்றி நின்றிருந்த திலகவதி இவளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தாள். வாயெழாமல் போகவே அவள் கைகளால் கணேசன் படுத்திருக்கும் இடத்தைக் காட்டினாள்.

உடனே மங்கை ஒரே பாய்ச்சலாக, கணேசன் இருக்குமிடத்தை அடைந்தாள். கோகிலா பின்னோடேயே சென்றாள்.

ஒரே தாவாகத் தாவிய மங்கை கணேசனை அப்படியே எடுத்துத் தழுவிக்கொண்டு, "கண்ணு, ஒரு வாரத்திலே இப்படி உருக்குலைந்து விட்டாயே!" என்று கூறிப் பொருமினாள்.

மருத்து மயக்கத்தில் மெய்மறந்து படுத்திருந்த கணேசன், மங்கையின் ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தில் உணர்வு கொண்டு விழித்து எழுந்தான். மெல்ல மெல்லத் திறந்த அவன் கண்கள் மங்கையைக்கண்டதும் அகல விரிந்தன. "ஆ! சித்தி" என்று அலறியவாறே அவன் மங்கையை இறுகச் சேர்த்துக் கட்டிக் கொள்ளலானான்.

"சித்தி எங்கே போனே? சித்தி!......என்னைத் தனியா விட்டுட்டு எங்கே போனே? சித்தி... என்னண்டை சொல்-