பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

119


கட்டுக்குப் போய்விட்டாள். சிவகுமாரன் ஒதுங்கி நின்று அவருக்கு வழி விட்டான்.

மாசிலாமணி முதலியார் வரும்போதே இரத்தப் பசையற்ற தம் கண்களால் அவ்விடத்தை ஆராய்ந்து கொண்டு வந்தார்.

இவரைப் பார்த்தவுடன், பிள்ளையவர்கள் ஆசனத்தை விட்டு எழுந்தவாறு, "வாருங்கள் முதலியார்வாள், வாருங்கள்" என்று வரவேற்று உட்கார வைத்தார். பின் தாமும் தம் இருக்கையில் அமர்ந்து, "ஆமாம், இன்றென்ன புது வழக்கமாயிருக்கிறதே! நான் இருக்கிறேனா என்று குரல் கொடுத்துவிட்டு வருவது?......" என்று கேட்டார்.

மாசிலாமணி முதலியார், "ஹிஹி, ஒன்றுமில்லை. அண்ணா ! நான் வாயிற்படியில் காலை எடுத்து வைத்தபோது, நீங்கள் ஏதோ உரத்த குரலில் கோபமாகப் பேசுவது போல் கேட்டது. சந்தர்ப்பப் பேதமாயிருக்குமோ என்றுகூட எண்ணித் தயங்கினேன். அப்படியே திரும்பிப் போய்விட்டுப் பின்னர் வரலாம் என்றும்......." என்று இழுத்தார்.

"அட ஓ! இதுதானா விஷயம்?" என்று புன்சிரிப்போடு கூறிய பிள்ளையவர்கள், "நான் உரத்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு ரொம்ப பயந்து விட்டீர்களோ?" என்று கேட்டார்.

மாசிலாமணி, "இல்லையண்ணா, நீங்க எப்போதும் இப்படிச் சத்தம் போட்டுப் பேசுவதில்லை யல்லவா? அதனால் தான்......"

பிள்ளையவர்கள், "என்ன! அஹிம்சாவாதி வீட்டில்கூட இப்படி அட்டகாசமாயிருக்கிறதே என்று எண்ணினீர்களில்லையா ?..."

மாசிலாமணி, "அஹிம்சாவாதியும் மனிதன்தானே, அண்ணா! எவ்வளவு சாத்தமூர்த்தியாயிருந்தாலும், மனிதனுக்குக் கோபதாபங்கள் இல்லையென்றால் அவன் மனிதனா-