பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

153


மாதத்துக்கு மேலாகிவிட்டது. குடும்பத் தலைவியாயிருந்து எங்களுக்கெல்லாம் வாழ்வளித்து, வந்த நீ, நாங்கள் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத நெடுந்தொலைவில் உள்ள மேல் லோகத்துக்குப் போய்விட்டாய்! போன மாதம் வரை எங்களிடையே இந்த மாளிகையில் மானிடப் பெண்ணாக உலவிவந்த நீ , இப்போது தெய்வமாகிவிட்டாய். இது வரை பூதவுடலில் இருந்து எங்களுக்கு வழிகாட்டிவந்த நீ இப்போது சூசும தேகத்தில் இருந்து வழிகாட்டி வருவாய் என்பதில் சந்தேகமில்லை. நீ தெய்வத்தோடு தெய்வமாதி விட்டாலும் எங்களை மறக்கமாட்டாய்; கைவிடமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பொதுவாக நம் நாட்டில் பெண்கள் சுமங்கலிகளாக இறந்துவிட்டால் ஒவ்வொரு குடும்பமுமே அவர்களைத் தங்கள் தெய்வங்களாகக் கோடித்து, வருவது வழக்கம். அதுபோலவே, நாங்களும் எங்கள் குலதெய்வமாக-ஏன்? அதற்கு மேலாகவே-பாவித்துக் கோடித்து வருவோம். நம் குடும்பத்தில் ஒவ்வொரு காரியத்தையும் உன்னை நினைத்தே செய்வோம்.

அக்கா! நீ இறைவன் திருவடியை அடைந்ததிலிருந்து உன்னை நினைக்காத நேரமில்லை; நாளில்லை. ஆனால், உன்னோடு ஆத்மார்த்தமாகப் பேசிப் பிரார்த்தித்துக் கொள்ள இன்று தான் அவகாசம் கிடைத்தது. உனக்கு எல்லாம் தெரியும் நான் சொல்லவேண்டியதில்லை. நீ தான் எல்லாவற்றையும் ஆவி ரூபமாயிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயே உன் இறுதிச் சடங்குக்கு வந்திருந்த உற்றாரும் உறவினரும் போக இவ்வளவு நாட்களாயின. அம்மா கூட தேற்றுத்தானே போனார்கள்? கருமாந்திரம் ஆன பின்னர், உன் சகோதரிகளும் சகோதரர்களும் செய்த அட்டகாசங்களையும், பேசிய பேச்சுக்களையும் இப்போது, நினைத்துப்பார்த்தாலும் என் உடல் விதிர்ப்புறுகிறது. அக்கா!.. நீ அணிந்திருந்த நகை நட்டுகளையும் துணிமணிகளையும் கேட்டு, பணங்கேட்டு அத்தானை எத்தனை தொல்லைப்படுத்தி, விட்டார்கள்? எப்படியும் இங்கிருந்து முடிந்தவரை கிடைக்கக்

து.-10