பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தும்பைப் பூ


சொரூபமான விநாயகப் பெருமானையும், இரு பக்கமும் லக்மி, ஈரசுவதிதேவியரையும் சப்பரயொன்று செய்துவைத்திருந்தார். இப்போது பிள்ளையாரும் கலைமகளும் திருமகளும் நடராஜப் பெருமான் திருவோலக்கங்கொண்டிருந்த விதான பீடத்திலேயே முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிள்ளையார் பூஜை செய்யுமிடத்தில் திலகவதியின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் வரையப்பட்டிருந்த அவ்வண்ணப் படத்தின் முன், திலகவதி அணிந்திருந்த ஆடையணிகள் அழகுற வைக்கப்பட்டிருந்தன. சுவாமி சிலைகளுக்கும், படங்களுக்கும் பூமாலைகள் சூட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது போலவே, திலகவதியின் உருவப்படத்துக்கும் வாச மிகுந்த மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள்மீது நகைகளும் அவற்றின்மேல் ஜாதிக் கதம்ப மலர்களும் வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக் குத்து விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டிருந்தன. இருபக்கமும் ஊதுவத்திகள் கற்றையாகப் பொருத்தி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. இதன் புகையும் தூபகொலு சத்திலிருந்து எழுந்த சாம்பிராணிப் புகையும் நாலா பக்கமும் பரவி நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. தட்டத்தில் கற்பூரம் ஏற்றிவைக்கப்பட்டு ஜோதியாக எரிந்து கொண்டிருந்தது.

இவற்றுக்கு முன்பு மங்கையர்க்கரசி மண்டியிட்டு அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் திலகவதியின் உருவப்படத்தின் மீதே பதித்திருந்தன. அவளுடைய கரங்கள் வரங் கேட்பது போல், அப்படத்துக் கெதிரே நீண்டிருந்தன, அவள் தரித்திருந்த தும்பைப் பூப்போன்று துல்லியமான வெண்ணிறப் புடவை பிள்ளையவர்களின் கண்களைப் பறித்தன. மங்கையின் நா ஏதோ உச்சரித்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. "அக்கா! நீ எங்களையெல்லாம் விட்டுப் போய்விட்டாய் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. எங்கள் எல்லோரையும் அநாதையாக விட்டுச் சென்று ஒரு