பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

151


மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே!

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?"

இனிய கண்டத்திலிருந்து உருக்கமாக வெளிவந்து கொண்டிருந்த அற்புதப் பாடலொன்று அவர் செவிகளில் தேன் போல் இனிமையாகப் பாய்ந்தது. பிள்ளையவர்கள் அப்பாடலில் வயித்துப் போய் அப்படியே நின்றுவிட்டார்.

"இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர்உருவில்
என்புஅறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு

அன்புஅறாது என்நெஞ்ச அவர்க்கு."

தொடர்ந்து மற்றொரு பாடல் இனிமையும் பக்தியும் சொட்டச் சொட்டக் காற்றில் வந்தது அவருக்குத் தெளிவாகக் கேட்டது.

இது கேட்டு, பிள்ளையவர்கள், "ஆஹா!" என்று பரவசப் பட்டுப் போனார். அவர் அப்புளகாங்கித நிலையிலிருந்து விடுபடுவதற்குச் சில விநாடிகள் ஆயின.

பின்னர் அவர் பூஜையறையை நெருங்கி வெளியிலிருந்தவாறே மெல்ல எட்டிப் பார்க்கலானார். அங்கு காணப்பட்ட காட்சியைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவர் தினந்தோறும் இருந்து பூஜை புரிந்து வரும் பூஜையறை முற்றிலும் புதுமைக் கோலங்கொண்டிருந்தது. அந்தப் பூஜையறையில் சுவர் முழுவதும் கடவுளின் திருவுருவப் படங்கள் அழகாக மாட்டப்பட்டிருந்தன. அறையின் நடுவில் அழகிய விதானமொன்று அமைத்து, அதற்குள் அண்ட சராசரங்களையும் சகல லோகங்களையும் ஆட்கொண்டு அருளும் பெருங்கருணையுடனே அநவரதமும், ஆனந்த தாண்டவம் புரிந்துகொண்டிருக்கும் அம்பலவாணனின் அழகிய திருவுருவங்கொண்ட பஞ்சலோகங்களாலான சிலா விக்கிரகத்தையும், இடப்பாகத்தில் சிவகாம சுந்தரி சிலையையும் வலப்புறம் மாணிக்க வாசகப் பெருமானின் சிலையையும் சதானந்தம் பிள்ளை வைத்திருந்தார். அதற்கு நேரே கீழ்ப்புறத்தில் ஓங்கார