பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தும்பைப்பூ


படக் கூடிய களங்கத்தை, தன் கற்பைப் பற்றியே பிறர் சந்தேகத்துப் பழி பேசக்கூடிய கேவல நிலையை உண்டாக்கிக் கொண்டு தியாகஞ் செய்யத் துணிவு கொள்ளமாட்டாள். அத்தகைய அரும்பெரும் காரியத்தை நீ எங்கள் குடும்பத்துக்காக, எங்களுடைய குடும்பத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பதற்காக, செய்திருக்கிறாய். இதற்காக நானும் என் பிள்ளைகளும் உனக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நன்றிக் கடனை நாங்கள் எப்படி உனக்குத் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை. நீ எங்களை - எங்கள் குடும்பத்தை வாழ்விக்க வந்த குலதெய்வம் என்றே 'நான் மதிக்கிறேன். நாங்கள் உன்னைத் தெய்வப் பாவையாக வைத்தே வழிபட்டு வருவோம்.

மங்கை! நீ உடுத்திருக்கும் சுத்த வெள்ளைப் புடவையை போல, உன் உள்ளமும் தூய்மையாயிருக்கிறது. வாக்கும் துல்லியமாயிருக்கிறது. களங்கமும் குற்றமும் கற்புக் கனலியான உன்னை நெருங்க அஞ்சும்; நீ பெண்களிலேயே மிக நல்லவள்; நற்குணமும் நல்லொழுக்கமும் வாய்த்தவள், நீ தும்பைப் பூ போன்று துல்லியமானவள்; தூய்மையானவள். செடி கொடிகளில் எத்தனை எத்தனையோ வண்ண வண்ண மலர்கள் விதவிதமாக மலர்கின்றன, ஆனால் அவைகளில் மிகச் சிலவே வெண்ணிறமுடையனவாக இருக்கின்றன. அவ் வெண்ணிறப் பூக்களிலும் மல்லிகை, முல்லை போன்றவைகளையே மக்கள் விசேஷமாக விரும்பிச் சூடிக் கொள்ளுகிறார்கள், மல்லிகை, முல்லை வகைகளைப் பார்க்கையில் தும்பைப்பூ சிறிது - மங்கலான வெண்ணிறமுடையது தான்: தாவரங்களில் தாழ்வாக உள்ள சிறு செடிகளில் பூப்பவை தான் தும்பைப்பூ ஆனால், மக்களிடையே இந்தத் தும்பைப் பூவுக்கும் உள்ள மதிப்பும், பெயரும் மல்லிகை முதலிய வாசனை மிகுந்த மலர்களுக்குக்கூடக் கிடையாது. வெண்மையான பொருளை, வெண்ணிற ஆடையைப் பார்த்தால், தும்பைப் பூப்போல் துல்லியமாக இருந்கிறது; தும்பைப் பூப்போலத் தூய்மையான வெள்ளை நிறமுடையதாக இருக்-