பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

157


நடக்க யாருக்கும் துணிவு ஏற்படாது. அத்தானைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் உத்தமர்; பெரிய மனிதர் நான்தான் எல்லாவற்றிலும் சிறியவள்; சிறுமையுடையவள், என்னைத்தான் நீ கண்காணித்து வரவேண்டும். நாள் தவறினாலும் நான் உன்னைக் கோடித்து வருவதிலிருந்து ஒரு பொழுதும் தவறமாட்டேன், அக்கா!"

மங்கையின் பேதை நெஞ்சத்திலிந்து வெளிவந்த இப் பிரார்த்தனை வாசகங்களைச் செவியேற்ற சதானந்தம் பிள்ளையவர்கள் உள்ளம் உருகிப் போனார். அம்மன நெகிழ்ச்சி கண்ணீராக வெளிவந்து கொண்டிருந்தது. அவருடைய வாய் மெல்ல முணுமுணுக்கத் தொடங்கியது.

மங்கை, உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேனே! நீ எவ்வளவு பெரியவள்? நீ உன்னைச் சிறியவள்; சிறுமையுடையவள் என்று சொல்லிக் கொள்ளுகிறாயே! நீ வயதில் சிறியவளாயிருக்கலாம். நல்ல அறிவிலும் உயர் குணத்திலும், ஒழுக்கத்திலும் பெரியவளாக அல்லவா இருக்கிறாய்? நீ சாதாரணப் பெண்ணல்ல; அபூர்வப் பெண், இத்தகைய பெண்ணரசியான நீ எங்கள் குடும்பத் தலைவியாகவும் செவிலித்தாயாகவும் வாய்த்தது எவ்வளவு பெரும் பேறு? குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய தியாகஞ் செய்திருக்கிறாய்? நீ உன் வாழ்க்கையையே அர்ப்பணித்து விட்டாயே அது மட்டுமா நீ எங்கள் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வந்திருப்பதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும், பழியையுங்கூடப் பொருட்படுத்தாமல், அல்லவா உன் வாழ்வை எங்கள் குடும்பத்துக்கு ஒப்படைத்து விட்டாய்? நீ எங்களைப் பராமரிப்பதற்காக, எங்கள் குடும்ப நலனைப் பாதுகாப்பதற்காக உனக்கு ஏற்படக்கூடிய எத்தகைய அவப்பெயரையும் அபவாதத்தையும் ஏற்கவல்லவா துணித்து விட்டாய்? இது சாமானியமாக நினைத்துப் பார்க்கக்கூடியதா? ஒரு பெண் எதையும் தியாகஞ் செய்ய முன் வருவாள்; ஆனால், அவள் தன் வாழ்வைத் தியாகஞ் செய்ய முன்வர மாட்டாள். தன் வாழ்க்கைக்கு ஏற்-