பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தும்பைப்பூ

கிறது, அம்மா!..... நான் இப்போதே சொல்கிறேன், நான் சில நாள் இங்கிருந்து பார்ப்பேன். எனக்குப் பிடிக்காவிட்டால், உங்களுடனேயே ஊருக்குத் திரும்பி விடுவேன், தெரிகிறதா! நீங்க என்னை விட்டுவிட்டு உடனே போய்விடக் கூடாது. ஒரு வாரமாயினும் இங்கு இருக்க வேண்டும். நான் பழகுகிற வரை......" என்று விதிர் விதிர்ப்பு நீங்காமலே சொன்னான்.

"நீ எப்படித்தான் இந்த உலகத்தில் வாழ்வையோ? பெண்ணே! என்னை உன் கிட்டவே இருக்கச் சொல்கிறாயே! நான் எவ்வளவு காலம் உன்னோடு இருக்க முடியும்? எனக்கோ காடு வாவா என்கிறது; வீடு போபோ என்கிறது......." என்று கண்களில் நீர் துளிக்கச் சொன்னாள்.

மங்கையர்க்கரசி தாயின் வாயைக் கையால் பொத்தி, "நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது, அம்மா! நீங்க போய்விட்டால் எனக்கு என்னம்மா இருக்கிறது? உநிகளை விட்டால் எனக்கு வேறு துணை யார் இருக்கிறார்கள்? அண்ணனை மலையாக நம்பியிருந்தேன். அவரோ என்னைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார், நீங்களும் கைவிட்டு விட்டால்......" என்று உருக்கமாகக் கூறி வருகையில், சிவகாமியம்மாள் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, நன்றாகச் சொல்கிறாயே, மங்கையர்க்கரசி! நானா உன்னைக் கைவிட்டுவிடுவேன்? அது எப்படி முடியும்? அம்மா! ஒரு நாளும் இல்லை. நான் உன்னைப் பட்டணத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாலேயே மறந்து விடுவேன் என்று நீ எண்ணுகிறாயா? நான் என்னை மறக்கும் நிலை வந்தால்தான் உன்னையும் மறக்க முடியும். நான் உன்னை விட்டுப் போனால் என் உடல் தான் அங்கிருக்குமே யொழிய, உயிர் உன்னண்டைதான் சுற்றிக் கொண்டிருக்கும். மனம் உன்னைப்பற்றியே எண்ணித் துடித்துக் கொண்டிருக்கும். நான் அடிக்கடி வந்து உன்னைப் பார்த்து விட்டுப் போவேன்.. என்ன!......?" என்று ஆறுதல் மொழி கூறினாள்.