பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தும்பைப் பூ


கும்படியாக......' என்று பரிவுணர்ச்சியுடன் பேசிக் கொண்டே போனாள்.

இச்சமயத்தில் கணேசன் புத்தகப் பை தோளில் தொங்கத் துள்ளியோடி வந்து திலகவதியின். நீண்ட பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அவன்.பின்னலேயே கோகிலா புத்தக அடுக்கைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

கணேசன் புத்தகப் பையைக் கழற்றி ஒரு மூலையில் தூக்கி எறிந்து விட்டு, சித்தி காபி' என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தான்.

'பார்த்தாயா, மங்கை......! கணேசன் யாரைக் காபி கேட்கிறான்? என்னைக் கேட்டான, பார்த்தாயா? எல்லாப் பிள்ளைகளுமே... ...'

மங்கையர்க்கரசி வெட்கத்துடன் தலை குனிந்து பின் கணேசனப் பார்த்து, காபி போடலையே......” என்று கூறிச் சிரித்தாள்.

ஊஉம். பொய் சொல்றே, சித்தி!' என்று கூறிக் கொண்டே அவள்மீது தாவி அவளைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, காபி கொடுத்தாத்தான் உன்னை விடுவேன், பலகாரம் கூடக் கொடுக்கணும். பசிக்குது சித்தி' என்று கொஞ்சலோடு சொன்னான்.

இதற்குள் கோகிலாவும் புத்தகங்களை வைத்து விட்டு வந்து, தாயின் பக்கத்தில் நின்றவாறே, மங்கையர்க்கரசியைக் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இல்லை, கண்ணு, நிசமாகத்தான் சொல்கிறேன். காபி இன்னம் போடவில்லை" என்று கணேசன் கன்னங்களைச் செல்லமாகப்பற்றிக் கொண்டு சொல்லிய மங்கையர்க்கரசி, திலகவதி பக்கத் திரும்பி, அம்மாதான்......அவர்களைப் போய்ப் பிடித்துக்கொள்: விடாதே! என்று புன் சிரிப்போடு