பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

37


கணேசன் தலையையாட்டி, "அம்காவண்டை போன பிரப்பம்பழம் கெடைக்கும். அதெல்லாம் முடியாது. நீ தான் கொடுக்கணும், சித்தி. உன்னை விட மாட்டேன்......" என்று சொன்னான்.

இதைக் கேட்டு எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர். "பார்த்துக்கோ, மங்கை" என்ற திலகவதி, "சரி, சரி! கணேசா! சித்தியை விடு. உனக்கு ஒவல் போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன். தின்ன ஏதாயினும் வேண்டு மென்றால் பீரோவைத் திறந்து பழங்கள், கேக், பிஸ்கட் எல்லாம் இருக்கு. உனக்கு எது வேண்டுமோ, எடுத்துக் கொள். சித்திக்கு இங்கே வேலை இருக்கு. தொந்திரவு செய்யாதே, போ...' என்று சொன்னாள்.

சும்மா உட்கார்ந்திருக்கிறதுதான் வேலையா?...' என்று முனகிக் கொண்டே மங்கையர்க்கரசியை விட்டு எழுந்தான். கோகிலா, தம்பிக்குப் பட்சணம் எடுத்துக்கொடுத்து ஓவல் கலக்கிக் கோடு என்று கூறி அனுப்பினாள் திலகவதி. மங்கையர்க்கரசி கணேசனும் கோகிலாவும் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அவள் திலகவதி பக்கம் திரும்பி, ஏன் அக்கா! காபி போட வேண்டாமா குழந்தைகளே ஒவல் குடிக்கச் சொல்லி அனுப்பிவிட்டீர்களே! அடிக்கடி கேக்கும் ஒவலும் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகுமா? ஒவலும் பிஸ்கட்டும் வயிற்றைக் கட்டக் கூடியது என அத்தான் அடிக்கடி சொல் கிறாரே!......' என்று சொன்னாள்.

"அடிக்கடி எங்கே சாப்பிடச் சொல்கிறோம். இன்று ஒரு நாள் தின்னச் சொல்வதால் ஒன்றும் கெட்டுப் போகாது. ஒரு வேளை யாயினும் அதுவும் உனக்கு மனசு நன்றாயில்லாத இந்தச் சமயத்தில் நீ ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் இவ்விதம் சொன்னேன்.”