பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தும்பைப் பூ


"இந்தப் பாழுங் கட்டைக்கு ஒய்வு வேறே வேண்டுமா?"

"ஒரு வயசுப் பொண்ணு வாயிலிருந்து வருகிற பேச்சாயில்லையே இது கிழங் கெட்டுகள் பேசுகிற விரக்திப் பேச்சு போலல்லவா இருக்கிறது?....."

"ஏதாயினும் வேலை செய்துகொண்டே இருந்தால்தான் மனசு ஒரு கட்டுக்குள் அடங்கியிருக்கிறது அக்கா இல்லா விட்டால்......"

மங்கையர்க்கரசி இடைமறித்துப் பேசிய இப்பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே திலகவதி பேசத் தொடங்கினாள், எனக்கென்னமோ உன் போக்கே பிடிக்கவில்லை. வந்ததிலிருந்து பார்க்கிறேன்; நன்றாக உண்டு உடுத்து, கட்டிக் கழிக்க வேண்டிய இந்த வயதிலே ஒரு வேளை சாப்பிடுவது, நார்மடிச்சீலை, வெள்ளைப் புடவை, அல்லது தோம்புப் புடவை உடுத்துவது, பாயைக் கூடப் போட்டுக் கொள்ளாது தரையில் படுப்பது போன்ற பைத்தியக்கார செயல்கள்.

மங்கையர்க்கரசி ஆச்சரியந் தாங்காமல், என்ன அக்கா, இப்படிப் பேசுகிறீர்கள், பட்டணத்திலே வந்து வாழத் தொடங்கிய பின், நம் திலாசார மெல்லாம் உங்களுக்குக் கொனஷ்டையாகத் தென்படுகிறதா?...'

வெளியுலக விவகாரமே தெரியாமல் கிராமாந்தரங்களில் கிணற்றுத் தவளைகள் போல் வாழ்ந்தோமே! அந்தக் காலத்திலே, இந்த ஆசாரமெல்லாம் சரியாயிருந்திருக்கலாம். இப்போது உலகம் போகிற வேகமான போக்கிலே காதை மூக்கை மூனியாக்கிக்கொண்டு சரியாக உண்ணுது உடுத்தாது வாழ்வது அநாகரிகம் என்றுதான் எனக்குத் தோன்று கிறது......'

"ஐயோ, அக்கா!"

"நான் தீர்மானித்து விட்டேன், மங்கை! நீ இனி மேல் நான் சொல்கிறபடிதான் நடக்கவேண்டும். அத்தானிடம்