பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

39


சொல்லியனுப்பியிருக்கிறேன், உனக்கு. நல்ல பார்ட்ட"னாக ஒரு பொன் சங்கிலி வாங்கி வரச் சொல்லி. அதை நீ கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பட்டுப் புடவை தரிக்காவிட்டாலும் கொறனட்டுப் புடவை யாயினும் இனி உடுத்த வேண்டும்..."

"அக்கா! அக்கா! உங்களுக்குப் புண்ணியமுண்டு. மறுபடியும் நகை நட்டுப் போட்டுக் கொள்ளும்படி என்னை வற்புறுத்தாதீர்கள். கொஞ்ச நஞ்சம் எனக்கு இருந்த ஆசையையும் ஆண்டவன் அண்ணன் மூலமாக அடியோடு போக்கி விட்டான், அக்கா! இனி...”

மங்கையர்க்கரசி திலகவதியின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள். திலகவதி வியப்பும் வருத்தமும் தொனிக்க, "அப்படியானால் அண்ணன் ஆடையாபரணங்களைக் கூடவா எடுத்துக் கொண்டார்? நிலபுலத்தைத்தான் உனக்குச் சொல்லாமல் அடமானம் வைத்துவிட்டதாக மட்டுமல்லவா சித்தி சொன்னர்கள்?".என்று கேட்டாள்.

"அந்த வயிற்றெரிச்சலை ஏன் கிளறுகிறீர்கள்? அக்கா! எனக்குத் தெரியாமல் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் வாங்கிக் கொண்டதைக் கூட நான் பெரிதாகப் பாராட்டவில்லை. குடும்பக் கஷ்டத்துக்கு ஏதோ செய்துவிட்டார் என்றிருந்தேன். நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த செயின், தோடு, வளையல், பரியப் புடவை எல்லாவற்றையும் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் விற்றுச் சுட்டுக் கரியாக்கிவிட்ட கொள்ளையை நினைத்தால்தான் மனம் குமுறுகிறது. மைத்துனன்மார் ஏதாயினும் வல்லடி வழக் குக்கு வரப் போகிறார்கள் என்று அண்ணனிடம் அடைக்கலம் புகுந்தால்......" என்று ஆற்ருமையோடு பேசிக் கொண்டே போனள். இச்சமயத்தில் சதானந்தம் பிள்ளை, யோக்கியனுக்கு இந்த உலகத்தில் இடமேயிராது போலிருக்கிறதே! இக்காலத்