பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

43


நம்ம மூதாதையர்! வாழ்க்கையில் இல்லாததை ஒன்றும் சொல்லவில்லையே? மேலே நீறு பூத்திருக்கிறது என்று எண்ணிக்கையை வைத்து விடாதே, தம்பி! உள்ளே நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது என்று அவர்கள் எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். உலக விஷயங்கள், பொருள்கள், ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்க்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் உபதேசித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், மனிதர்கள்கூட நீறு பூத்த நெருப்புப் போன்றவர்கள்தாம்......"

சதானந்தம் பிள்ளை: "அதில் சந்தேகம் என்ன!"

மாசிலாமணி முதலியார், "ஆனால் பஞ்சசீலத்தில் தங்களைப் புடம் போட்டு மாற்றில்லாத பஈம் பொன் போன்று பக்குலமாக்கிக் கொண்ட புனிதர்கள் இப் பூவுலகில் இல்லாமல் இல்லை, நல்லொழுக்கம் என்னும் நீரால் நெருப்புப் போன்ற தீக்குணங்களையும் செயல்களையும் அவித்துக்கொண்டு முழு நீராக விளங்கும் செம்மல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்."

சதானந்தம் - பிள்ளை; "லட்சத்தில் ஒருவர்-இல்லை; கோடியில் ஒருவர்-இருப்பார்களா என்று எனக்கு ஐயமாயிருக்கிறது."

மா : "இன்றைய நிலையை மனதில் கொண்டு அவ்விதம் எண்ணுகிறீர்கள், அண்ணா! நல்லவர்கள் நாலு பேராயினும் இருப்பதால்தான், நாடு - இல்லை; - உலகம் நிலைத்திருக்கிறது. இல்லையானால்..."

ச; "உலகம் என்றால் நல்லதும் கெட்டதும் விரவித்தானிருக்கும் என்று எனக்குத் தெரியாமலில்லை. நல்லவற்றைவிட தீயவைகளே அதிகம் என்பதையும் நான் நன்கு அறிவேன். ஆனால் இன்று உலகம் போகும். போக்கைப் பார்த்தால்-அதிலும் நம் நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், நூற்றுக்குஒருவர் இல்லை; ஆயிரத்துக்கு ஒருவர் நல்லவரென்று சொல்லக்கூடிய விதமாக இருப்பார்களோ என்று சந்தேகிக்-