பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தும்பைப் பூ


கிறேன். மற்றத் தேசங்களைவிட நம் நாடு ஞானத்திலே, பரமோனத்திலே பேர் போனது என்றும் பாரத புண்ணிய பூமியென்றும் பாராட்டிச் சொல்லிக் கொள்கிறோம். அப்பேர்ப்பட்ட நாட்டில்தான்..."

மா; "எனக்குக்கூட அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது, அண்ணா ! மிலேச்ச நாகரிகம் மிதந்த மேனாடுகளிலே - கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று லோகாயதக் கொள்கையை மேற்கொண்டு கூத்தடிக்கும் மற்றத் தேசங்களிலே மக்கள் எப்படி நடந்தாலும் ஒழுக்கம் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நமக்கு அக்கரையில்லை. ஒழுக்கத்துக்கு உயர்வு கொடுத்தது நம் நாட்டிலே, நல்லொழுக்கமும் மான மும் உயிரைவிட மேலானவை என்று கருதிக் கடைப்பிடித்துவந்த நம் நாட்டிலே, அன்பே கடவுள், அறிவே கடவுள் என்ற அறைந்த நாட்டிலே - அறிவு அருகிவிட்டது, ஒழுக்கம் ஒழிந்துவிட்டது, அன்பு வம்பாகி விட்டது என்றால், காலத்தின் அலங்கோலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்..."

ச: "எல்லாம் அந்த மேனாட்டு மிருக நாகரிக உறவின் விளைவு தான். வேறென்ன?..."

மா; "அந்த ஐரோப்பியர்களின் அநாசாரத்தை - ஏகாதிபத்திய எதேச்சாதிகாரத்தை... அறவே ஒழித்துக் கட்டடவே தானே காந்தி அடிகள் கிளம்பினார்! அயோக்கியத்தனத்துக்கும் அட்டூழியங்களுக்குமே இருப்பிடமான அரசியலிலே அவர் அஹிமஸா தத்துவத்தையும் சத்தியத்தையும் புகுத்திப் புனிதப் படுத்தினார்; ஆயுத பலத்தைக் கொண்ட ஆங்கிலேயர்களை ஆத்ம பலத்தால், அஹிம்ஸை என்னும் ஆயுதத்தால் விரட்டியடித்தார்; பிற நாடுகளைப் போல, இரத்தப் புரட்சியின்றி அறப் புரட்சியாலேயே மிக எளிதாகச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இதுவரை மற்ற மகான்கள் சாதித்காத - மகாஞானிகளால் செய்ய - முடியாத மகத்தான காரியங்களை மகாத்மா காந்தி சாதித்ததைப் பார்த்தபோது,