பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

45


இவரால் பொய்யிலும், புரட்டிலும், கொடுமையிலும் உழன்று வரும் உலகமே விமோசனமடையும்; சண்டையும் சச்சரவும் தீர்ந்து சமாதானமும் சாந்தியும் நிலவும்; பழையபடி மிருகமாக மாறிவரும் மனிதர்கள் மனிதர்களாகவே மாறுவார்கள்; மனித குலமே நன்மையும் நல்வாழ்வும் பெறும் என்று நம்பிளுேம். அதற்குள்......"

"அந்தத் துர்ப்பாக்கிய சம்பவத்தை இப்போது நினைவுபடுத்தாதீர்கள்" என்று இடைமறித்துப் பேசத் தொடங்கிய சதானந்தம் பிள்ளை, மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான் திடீரென மறைந்து விட்டதனால்தான், இவ்வளவு அக்கிரமங்கள் நம் நாட்டில் நடக்கின்றனவோ என்றுகூட நான் எண்ணுகிறேன். ஒரு வேளை அவர் இருந்தும் இப்படி காங்கிரஸிலே அடங்காப் பிடாரிகளும் அக்கிரமக்காரர்களும் அதிகரித்துவிட்டதைக் கண்டிப்பாரானால் கட்டாயம் உண்ணாவிரதமிருந்து உயிரையே மாய்த்துக்கொண்டிருப்பார். அந்த மட்டும் இந்த அவல நிலையைக் காணாமல் போய்விட்டாரே...... !’ என்றார்.

மாசிலாமணி முதலியார் மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சதானந்தம் இப்படி யெல்லாம் ஆகுமென்று தெரிந்துதான் போலும் அவர் அரசியல் சுதந்திரம் கிடைத்ததும், காங்கிரஸ் ஸ்தாபனத் தைக் கலைத்துவிடச் சொன்னா lர். மற்றத் தலைவர்கள். அவருடைய யோசனையைக் கேட்டு நடக்காமல் போனதால்தான் இந்த அலங்கோல நிலை ஏற்பட்டிருக்கிறது. அயோக்கியர்களெல்லாம் பதவிகளுக்காக அடைக்கல மடைவதால் தான் காங்கிரஸ் என்றால் கால் காசுக்கும் நம்புவாரில்லாமல் போய் விட்டது. காங்கிரஸ் என்ற பெயரையும் சொல்லிக் கொண்டு கள்ள வாணிபஞ் செய்கிறார்கள் கயவர்கள். சிறிது காலத்துக்கு முன் வரை, காங்கிரஸ் தொண்டன் என்றால், கடவுளுக்குச் சமமாக நினைத்தார்கள்; ஒழுக்கத்துக்கு உறைவிட மானவர்கள்; தன்னலமில்லாத தயாபரர்கள்; பிறருக்குச் சேவை புரிவதையே பேறாகக் கொண்ட புண்ணியவான்கள்