பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தும்பைப் பூ


என்று மக்கள் மகிழ்ந்தார்கள். கிராமங்களுக்குப் போனால், அடடா, காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு மரியாதை? என்ன?.....' அத்தான் சொல்வது அவ்வளவும் நிசம், அக்கா! எங்க ஊர்ப் பக்கம் காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால் பார்க்க வேண்டுமே! அவர்கள் கூட்டங்களில் பேசி விட்டுப் போகும் வரை ராஜோபசாரம்தான். அவர்கள், கள் குடிக்காதீர்கள் என்று சொல்லி எத்தனையோ பேர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு ராட்டை சுற்ருத பெண்கள்கிடையாது. இப்போதோ அந்தவெட்கக்கேட்டைச் சொல்லவே முடியாது. காங்கிரஸ் அரசாங்கம் வந்து கள்ளுக் கடையை மூடிவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் ஊர்களில் ஒரு கடைக்கு ஒன்பது கடையாய்விட்டது. பெண் ஆண் எல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள். பதனீர் இறக்குவதாகச் சொல்லிக் கள் இறக்கிப் பகிரங்கமாக விற்கிறார்கள். இந்த வேலையைச் செய்பவர்கள் யாருமில்லை. இன்று புதிதாகக் காங்கிரஸில் சேர்ந்திருப்பவர்களே! இப்போது காங்கிரஸ்காரர் என்று சொல்லிக் கிராமத்துப் பக்கம் யாரும் போகமுடியாது. மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு அவர்கள் மீது......' என்று அடுத்த அறைப்பக்கம் இருந்த மங்கையர்க்கரசி திலகவதியிடம் சொன்னாள். மாசிலாமணி முதலியாருடன் ஆழ்ந்து பேசிக் கொண்ருந்த சதானந்தம் பிள்ளையின் செவிகளில் மங்கையர்க்கரசியின் இனிய குரல் நுழையவே, அவர் தாம் பேசுவதை நிறுத்திவிட்டு அவளுடைய பேச்சை உன்னிப்பாகக் கேட்கலானார்.

சதானந்தம் பிள்ளை திடீரென மெளனமாய் விட்டது மாசிலாமணி முதலியாருக்கு வியப்பூட்டியது. அவர் காரணமறியாமல், என்ன அண்ணா இருந்தாற் போலிருந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்....?' என்று கேட்டார். மங்கையர்க்கரசியின் பேச்சில் மனதை முற்றும் பறி