பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

47


கொடுத்திருந்த சதானந்தம் பிள்ளை, உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துப் பார்ப்பவர் போல், ஒன்றுமில்லை அண்ணா ! ஏதோ சொல்ல நினைத்தேன். இதற்குள்..... .” என்று இழுப்புடன் சொல்லி நிறுத்தினார்.

உள்ளே திலகவதி, அட, அத்தானை மிஞ்சிவிடுவாய் போலிருக்கே மங்கை, நீ? ஏது, ஒன்றும் தெரியாதவள் போல் உம்மென்று இருக்கிறாய். வாயைத் திறந்தால் தானே தெரிகிறது, நீ நன்றாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாய் என்று ...”

"போங்க, அக்கா, பரிகாசம் பண்ணுகிறீர்கள். அதற்குத் தான் நான். ..."

அதற்குத்தான் நீ வாயைத் திறக்கிறதில்லை என்கிறாயா?. ... அது போகட்டும்; மங்கை! நீ எது வரை படித்திருக்கிறாய்?......”

"நான் படித்த படிப்பைச் சொல்லு அக்கா! எட்டாவது படித்து விட்டு ஒன்பதாவது வகுப்புக்குப் போனேன். அதற்குள்...... என்று கூறி மங்கை நாணம் முகத்தில் தெரியத் தலை குனிந்து கொண்டாள்.

"கிராமங்களில் அது ஒரு தொல்லை. வயது வந்து விட்டால் வெளியே படிக்கப் போகக் கூடாதொன்று பெண்களுக்கு கட்டுப்பாடு. காய்கறித் தோட்டத்துக்குப் போகலாம்; மாந்தோப்புக்குப் போகலாம்; தண்ணீர் முகந்துவர, ஆறு குளங்களுக்கு ஐங்காத தூரம் கூடப் போகலாம். ஆனால், பள்ளிக்கூடம் மட்டும் படிக்கப் போகக் கூடாது பருவமான பெண்கள். நன்றாயிருக்கிறதில்லையா நியாயம்?......'

மங்கை மெளனமாயிருந்தாள். திலகவதி. இது உனக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? மங்கை பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போனால்தான பெண்கள் கெட்டு விடுவார்கள்? தோப்பு துறைக்குப்