பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தும்பைப்பூ

போனால் கெட்டுவிட மாட்டார்களா? அங்கெல்லாம் அவர்களை ஆண் பிள்ளைகள் பார்க்கமாட்டார்கள் போலும்!"

"பெரியவர்கள் ஏதோ காரணத்தை உத்தேசித்துத் தான் இவ்விதம் கட்டுப்பாடு செய்திருப்பார்கள்..."

"பெரியவர்களுமாச்சு; சின்னவர்களுமாச்சு. முட்டாள் தனமாகக் கட்டுப்பாடுகள் செய்தவர்கள் யாராயிருந்தால் என்ன? இந்தக் கட்டுப்பெட்டிகளெல்லாம் இந்தக் காலத்தில் இருக்க லாயக்கில்லாதவர்கள்......" என்று திலகவதி உணர்ச்சியோடு பேசினாள்.

இவைகள யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளை புன்சிரிப்பு செய்தவாறே எழுந்து கையைக் மூவிக்கொண்டு, "அந்தப்புரத்துப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால், நமக்குப் பேச விஷயம் ஏது?..." என்று கூறினார்.

உள்ளே பெண்கள் பேசுவதை இதுவரையும் சுவனியாத மாசிலாமணி முதலியார், "என்ன அண்ணா, சொல்கிறீர்கள்? என்னமோ சிரிக்கிறீர்களே! நான் ஏதேனும் அசட்டுத்தனமாகப் பேசி விட்டேனா......?" என்று கேட்டார்.

"அசட்டுத் தனமாகப் பேசுவதற்கு நீங்கள் மகாசபை அங்கததினர் இல்லையே!" என்று சதானந்தம் பிள்ளை கூறி மேலும் சிரித்தார்.

விஷயத்தைச் - சரியாகப் புரிந்து கொள்ளாமலே மாசிலாமணி முதலியாரும் அவருடன் சேர்ந்து நகைக்கலானார்.