பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தும்பைப் பூ


‘ஊரான் உழுது விட்டுப் போக, பண்ணைக்காரன் தண்டவரி செலுத்த வேண்டியிருக்கிறது’ என்று பழமொழி சொல்லுவார்களே! அதுபோல மற்றவன் செய்யுந்தப்புத் தண்டாவுக் கெல்லாம் நாம் சமாதானஞ் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. இதையெல்லாம். பார்த்தால்.....” என்று பேசி வருகையிலேயே, முதலியார் இடைமறித்து, “கேட்பவர்கள் கண்டவர்களைக் கேட்பார்களா? கேட்பதற்கு உரிமையுடையவர்களிடத்தில் தான் கேட்பார்கள். ஆகவே இங்கு நடக்கும் காங்கிரஸ் விவகாரகளுக்குச் சமாதானமோ அல்லது பதிலோ சொல்லும் கடமை உங்களுக்கு இருக்கிறது......” என்று கூறினார்.

“அதென்ன, அப்படிச் சொல்லுகிறீர்கன்? முதலியார் வாள்! நானென்ன......”

பிள்ளையவர்களை மேலே பேசவிடாமல், முதலியார் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, நீங்களில்லாமல், நேற்று பட்டம் பதவிகளுக்காக வந்தவனெல்லாமா ― பதில் சொல்வான்? தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்றால், நீங்கள், சிதம்பரம், சிவம், பாரதி, கல்யாணசுந்தரம், வரதராசன், இராமசாமி, ஸ்ரீநிவாசன், சத்தியமூர்த்தி, இராஜகோபால் ஆகிய பத்து பேர்தானே! காங்கிரஸை தேச மகாசபை என்று கூறும்படியான பெருனயேயேற்படச் செய்தவர்கள் நீங்கள் அல்லவா! சுதந்திர தாகத்தையும் தேச பக்தியையும் தமிழ் மக்களுக்குக் காங்கிரஸ் வாயிலாக உண்டாக்கியவர்கள் நீங்கள் அல்லவா! காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பைப் பெற்றிருக்கும் இன்று வேண்டுமானால், பல்லாயிரம் பேர் காங்கிரஸ்காரர் என்று சொல்லிக் கொண்டு முன் வரலாம். ‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்றிருந்த அன்னிய அரசாங்க அடக்கு முறைக் கொடுமையினால், நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் நீங்கள் அல்லவா! இன்று சட்டசபை யங்கத்தினர்களாய்,