பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

51

மந்திரிகளாய் இருப்பவர்கள் எல்லோருமா சுதந்திர வீரர்களாயிருந்தனர்? அவர்களை மக்கள் கேட்பதற்கு?”

பிள்ளையவர்கள் கலகலவென்று நகைத்து, “பேஷ் முதலியார்வாள்! நன்றாகப் பேசுகிறீர்களே! வரப் போகும் பொதுத் தேர்தலில் உங்களைப் பிரசாரஞ் செய்ய வைத்தால் நீங்கள் ஆதரிக்கும் அபேட்சகர் கட்டாயம் வெற்றி பெறு வார்......... ” என்று கூறினார்.

முதலியார் அவர் பேசுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, “அக்காலத்தில் உங்கள் போன்ற தலைவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரித்தார்கள்? உங்களைப் போன்ற தலைவர்கள் நடத்திய போராட்ட இயக்கங்களில் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள்? போலீஸ் குண்டாந் தடிகளால் அடிபட்டு இரத்தஞ் சிந்தினார்கள்? துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி உயிர் இழந்தார்கள்? சிறைவாசம் ஏற்றார்கள்? இவ்வளவும் எதற்காக? தங்களுக்குக் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும்? சுகவாழ்வு ஏற்படச் செய்யும் என்றுதானே! இவ்விதம் அவர்கள் எதையெதை எதிர்பார்த்துக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்களோ, அவற்றிற்கெல்லாம் நேர்மாறாக இன்று காரியங்கள் நடைபெற்றால், நாட்டு மக்களுக்குக் கோபமுண்டாகத்தானே செய்யும்? அரசியல் சுதந்திரம் கிடைத்தும் வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்கவில்லை யென்றால், சுகவாழ்க்கை கிட்டவில்லை யென்றால், இந்த அவல நிலையை எப்படி ஏற்பார்கள்? அடிமைகளாய் இருந்த காலத்தில் அனுபவித்த வாழ்க்கையின்பங்களைக்கூட இன்று அனுபவிக்க முடியாமல், துன்பத்தின்மேல் துன்பமாக, வறுமையும் பஞ்சமும் வாட்ட அவதியுறும் நிலையை எப்படி சகிப்பார்கள்? எங்கும் கள்ள வணிகர்களும், பேராசைப் பேயர்களும் கொள்ளையடிப்பதற்கா, தங்களின் சுகவாழ்க்கையைச் சூறையாடுவதற்கா, இவர்கள் அந்தக் காலத்தில் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களைப் பின்பற்றி வந்து துன்பங்களையும் கஷ்டங்களையும் வலிய ஏற்றார்கள்? சுயநலக்காரர்