பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தும்பைப் பூ

யும் பூமியையும் பார்த்துக் கொண்டு சதா யோசனையில் இருக்கிறாயே! உன் மனசில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறே?..” என்று படபடவெனப் பேசினாள்.

“சித்தி, நீ முதலிலே எனக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அக்கா செய்கிற அதிகாரத்துக்கு அடங்கிப் பதில் சொல்லு....” என்று தாயையும் சின்னம்மாவையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் விஸ்வம்.

இதற்குள் தன் கோட்டைத் தேடிப் பார்த்துப் போட்டுக் கொண்டு வந்த சிவகுமாரன். “ஏன் அம்மா வீணுக்காயினும் சத்தம் போடறே! பாவம், சித்தி சாதுவாயிருக்கவே ரொம்ப ஏமாற்றுகிறாயே! கூப்பிட்டது காது கேக்கல்லேன்னா......?” என்றான்.

விசுவநாதத்தின் கேலிப் பேச்சு திலகவதிக்கு அதிக ஆத்திரத்தை யுண்டு பண்ணிவிட்டது. ஆதலால் சிவகுமாரன் பேசுவதைச் சிறிதம் கவனியாமல், “சித்தியை எவ்வளவு நாளாடா கண்டிங்க? எதற்கெடுத்தாலும், எப்போ பார்த்தாலும் சித்தி, சித்தி என்று கூப்பிட்டுக் கொண்டு. ஏதாயினும் வேண்டுமென்றால் கோகிலாவைக் கூப்பிட்டுக் கேட்கிறது, இல்லை; என்னைக் கேட்டால் செய்கிறேன். அதைவிட்டு விட்டு, சித்தியாம், சித்தி! சித்தி இத்தனை நாளா இல்லாமே இப்போ எங்கே இருந்துடா வந்து விட்டாள்......?” என்று ஆங்காரம் பொங்க முழங்கினாள்.

தாயின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துப் பெரிய பிள்ளைகளும் அசந்து நின்றுவிட்டனர். விவரிக்க வொண்ணாத திகைப்பினுலும் பீதியினாலும் மங்கை வாயடைத்துப் போய் நிற்கலனாள். கணேசன் கோபத்தினால் சிவப்பேறியிருந்த தாயின் முகத்தைப் பார்த்தவாறு, மங்கையை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.

அன்னை இதற்கு முன் இப்படிக் கோபமாகப் பேசி அதுவும் சிற்றன்னையிடம் உரத்துப் பேசிக்கூடப் பார்த்தறியாதஆ