பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தும்பைப் பூ

மெல்லாம் செய்...” என்று திலகவதி கூறிய சொற்கள் அவளைப் பின்பற்றி வந்தன.

வேலைக்காரி வேலைகளையெல்லாம் செய்துவிட்டு மங்கை கொடுத்த சோறு, கறிகளை எடுத்துக் கொண்டு போனாள். மாலை மணி நான்கடிக்கவே, மங்கை அடுப்பில் காபி உலையை வைத்துவிட்டு, சிற்றுண்டி வகைகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானாள்.

மங்கை என்ன செய்கிறாள் என ஜாடையாகப் பார்க்க வந்த திலகவதி, “என்ன பலகாரம் செய்யப் போகிறாய், மங்கை?” என்று மெல்லக் கேட்டாள். அவள் குரலில் இரக்கம் தொனித்தது.

“என்ன, செய்யலாம், அக்கா!”

திலகவதியின் குரல்கேட்டுத் திரும்பிய மங்கை மரியாதையாகக் கேட்டாள்.

“இத்தனை நாள் என்னைக் கேட்டா செய்தாய்? ஏதோ செய்கிறதைச் செய்.”

இவ்விதங் கூறிவிட்டு, திலகவதி கூடத்துக்குப் போகலானாள். கேசரி செய்வதற்குக் கோதுமை ரவையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மங்கை அவள் போவதைப் பார்த்து ‘அக்கா!’ என்று கூப்பிட்டாள்.

என்ன? எனத் திரும்பினாள் திலகவதி.

ஏதோ உணர்ச்சியின் உந்துதலால் கூப்பிட்டாளே யொழிய, அவள் என்ன எனக் கேட்டதும், வாயெழாமல் நிற்கலானாள் மங்கை.

“ஏதோ கூப்பிட்டாய்? என்ன என்று கேட்டால் பேசாமலிருக்கிறாயே, மங்கை!”

மங்கை, “ஒன்றுமில்லை, அக்கா” என்று தயக்கத்தோடு கூறியவள், பின், “ஊருக்குப் போய் வரலாம் என...”