பக்கம்:துளசி மாடம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 துளசி மாடம்


எங்கே?" என்று அப்போதுதான் சர்மாவைக் கேட்டாள். சர்மா, குமார் தனக்குக் கூறிய அதே பதிலை இன்னும் அதிக வால்யூமுக்கு உயர்த்தி அவளிடம் சற்றே இரைந்து விளக்கிக் கூறினார்.

1 O

ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடு விடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலைமேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும்படி தூண்டியதே வேனுமாமாவும் வசந்தியும்தான். அன்றிரவு இந்த இளம் காதலர்களுக்குச் சுதந்திரமான மகிழ்ச்சியை அளிக்க விரும்பி அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய் தார்கள். காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் வைதிகமான வீட்டின் கெடுபிடிகளிலிருந்தும் அந்த ஒர் இரவிலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டுமே என்று எண்ணித்தான் இதை அவர்கள் செய்திருந் தார்கள். -

மலைமேல் வேணுமாமாவுக்கே எஸ்டேட் இருந்தா லும் அந்த எஸ்டேட் நான்கு மணி நேரத்துக்கும் அதிக மாகப் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் இருந்தது. முப்பது முப்பத்தைந்து மைல் தொலைவில் ஒரு மணி அல்லது ஒன்றரைமணி நேரப் பயணத்தில் செல்கிறாற். போல் மிக அருகிலேயே மலையில் இருந்தது நாயுடுவின் எஸ்டேட். அதையும் தவிர நாயுடுவின் எஸ்டேட்டுக்கு நடுவில் இருந்த பங்களாவும் விருந்தினர் விடுதியும் சகல வசதிகளும் உள்ளவையாகவும் பெரிதாகவும் இருந்தன. காரணம், நாயுடு எஸ்டேட்டுக்குள்ளேயே குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழே கிராமத்தில் வசித்து வந்த காரணத்தால் வேணுமாமா தமது எஸ்டேட்டில் போகிற போது வருகிறபோது தங்கிக் கொள்ள ஒரு சிறிய விருந்தினர் விடுதி மட்டுமே கட்டியிருந்தார். அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/116&oldid=579832" இலிருந்து மீள்விக்கப்பட்டது