பக்கம்:துளசி மாடம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 121


களையும் காவியங்களையும் ஆகமங்களையும் சாஸ்திரங் களையும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தேவை யில்லாமல் ம்னத்திலேயே பொதிந்து வைத்திருக்கும் உங்கள் தந்தையும், நுண்கலைகளின் இருப்பிடமாக விளங்கும் உங்கள் தர்யும் போன்றவர்கள் இருக்கி றார்கள்?" -

"என் பெற்றோர்களை நீ அதிகமாகப் புகழ்கிறாய் கமலி!"

'அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான்! அவர் களிடம் இல்லாததை நான் எதுவும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை."

சங்கரமங்கலமோ தன் பெற்றோர்களோ கமலியை ஒரு சிறிதும் சலிப்படையச் செய்துவிடவில்லை என்பதை அறிந்து ரவிக்குப் பெருமையாயிருந்தது. பிரெஞ்சுப் பெண்களுக்கே உரிய கவர்ச்சி, ஒழுங்கு, நேர்த்தி, கட்ட மில்லாமை, தெளிவு, சரசம்-இவையெல்லாவற்றிலும் ஒரு ஸ்மார்ட்னெஸ் இவற்றால்தான் கமலி அவனைக் கவர்ந்திருந்தாள். இப்போது தன் பேச்சின் மூலமும் தன்னைப் பற்றிய அவனது கணிப்பை அவள் உறுதிப் படுத்தினாள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே அன்றிரவு அவர்கள் உறங்கப் போனார்கள். - அது மலைப் பகுதியாக இருந்ததனால் காலை ஒன்பது மணிக்கு முன் யாருமே அங்கு எழுந்திருக்க வில்லை. விடிந்திருந்தும் எழுந்திருக்க முடியாதபடி மஞ்சு மூட்டமும் குளிரும் அதிகமாயிருந்தன. காலை பத்து மணிக்குத்தான் ரவியும் கமலியும் எழுந்திருந்தார் கள். பல் விளக்கி, முகம் கழுவிய பின் காப்பி அருந் தியதுமே கீழே ஊர் திரும்பத் தயாரானார்கள் அவர்கள். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் நாயுடு வந்து குறுக்கே நின்றார். நல்லாயிருக்குதே! மலைக்கு வந்து உடனேயா திரும்புவாங்க? பக்கத்திலே ஒர் அருவி இருக்குது. சுகமாய்ப் போய்க் குளிக்கலாம் அதுக்கப் புறம் பத்து மைலிலே எலி...பெண்ட் வேலி'ன்னு ஒரு பள்ளத்தாக்கு இருக்குது: யானைங்க கூட்டம் கூட்டமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/123&oldid=579839" இலிருந்து மீள்விக்கப்பட்டது