பக்கம்:துளசி மாடம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 11


ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறை யோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே... விஷயம் இரசாபாசமாயிடும்' என்று அவர் பதில் சொல்லிய விதமே அவள் ஆவலை அதிகப்படுத்தி விட்டிருக்கும். காமாட்சியம்மாளுக்குத்_கொஞ்சம் காது மந்தம் வழக்கம்போல் உனக்கு இப்போ ஒண்ணும்...' என்று இரைந்து உரத்த குரலில் தொடங்கிய சர்மா அந்த் முதல் மூன்று சொற்களுக்குப் பின் ஒலியை ம்ெதுவாக்கி மற்ற_வார்த்தைகளை மென்று விழுங்கி னாற் போல அமுக்கி விட்டார். ஆகவே உரையாடலின் பின் பகுதியில் அவர் என்ன சொன்னாரென்று நல்ல வேளையிர்கக் காமாட்சியம்மாளுக்குப் புரியவில்லை.

ද්

3. o なQ GQ Go

சங்கரமங்கலம் அக்கிரகாரம் மற்ற எல்லா அக்கிரகாரங்களையும் போல வம்பு தும்புகளும், புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும், பயனற்ற முரண்டுகளும் நிறைந்ததுதான். எல்லாவிதமான மனிதர் களும் அங்கு இருந்தார்கள். புதுமையை அங்கீகரிக்காத வறட்டுப் பிடிவாதம், சாதி சம்பிரதாய ஆசார அதுஷடானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் பழைய வைதிகர்களின் பிடிப்பு, படித்த இளைஞர்கள் உத்தியோகங்களுக்காகக் கிராமத்தைவிட்டு வெளி யேறுதல், கட்சி கட்டுதல். ஒற்றுமையின்மை, வயல் வரப்புச் சண்டை வைக்கோல் போருக்குத் தீ எல்லாம் சகஜமாக அந்தக் கிராமத்திலும் இருந்தன.

இன்றைய இந்தியக் கிராமம் என்பது முழுவதும் பழமையான நன்மைகள் நிறைந்ததுமில்லை. முழுவதும் புதுமையான வளர்ச்சிகள் நிறைந்ததுமில்லை. பழை மையை விடமுடியாமல், புதுமையைப் புறக்கணிக்கவும் முடியாமல், சடங்கு சம்பிரதாயங்களை தவிர்க்கவும் முடியாமல், விஞ்ஞான விவேக வளர்ச்சிகளை விட்டு விடவும் ஏற்கவும் இயலாமல் தவிக்கும் ஒர் இரண்டுங் கெட்டான் நிலையில் அது இருந்தது. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், பணத்தாசை, பொறாமை, திருட்டு, நட்பு, விரோதம், அசூயை, விபூதி, துளசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/13&oldid=579727" இலிருந்து மீள்விக்கப்பட்டது