பக்கம்:துளசி மாடம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 துளசி மாடம்


சீட்டாட்டம், புகையிலை, பொடி, வேதம், அத்யாயனம், வறுமை, செல்வம் என்று இவையெல்லாம் எப்படி ஒன்றோடொன்று ஒட்டாதவையோ அப்படியே இந்தியக் கிராமங்களின் நிலையும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருந்தது, - ப்.இ *

! ß ώ)! Gör l_jIT lil வாசத் கப் அே ಫ್ಲಿಿಸಿ ம்ே 鷺 இன்னும் அதிகம். சங்கரமங்கலம் தீர்வாசத்தில் இருந்த விளம்ான கிராமம். அங்கே பாயும் அகஸ்தியநதி வற்றி மணல் தெரிந்தது என்ற பேச்சுக்கே இடமில்ல்ை. பொன் விள்ையும் பூமி என்பார்களே அப்படிப்பட்ட கிராமம். கிராமத்திலிருந்து வெளியேறி பெரிய உத்தியோக அந்தஸ்தில் இருக்கிறவர்களின் பட்டியலில் முதலிடம் யுனெஸ்கோவில் உள்ள வேணு மாமாவின் பிள்ளை சுரேஷ-க்குத்தான். தொழில் துறையில், வியாபாரத்தில் சர்க்கார் உத்தியோகங்களில், கம்பெனி நிர்வாகப் பதவிகளில் அந்தக் கிராமத்திலிருந்து சென்ற வர்கள் பலர் இருந்தாலும் சுரேஷ-க்கு அடுத்த இடம் என்னவோ சர்மாவின் பிள்ளை ரவிக்குத்தான் தரப்பட்டிருந்தது. - நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இப்போது பாரிஸில் ரவி பார்க்கும் இந்த உத்தியோகத்திற்காக அவன் விண்ணப்பித்தபோது தனக்கு இது கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை.

பிரான்ஸில் உள்ள பெரிய பல்கலைக் கழகத்துக்காக :புரொஃபஸர் ஆஃப் இண்டியன் ஸ்டடீஸ்- அண்ட் ஒரியண்டல் லாங்வேஜஸ் டிபார்ட்மெண்ட்' பதவிக்கு மனுக்களைக் கோரி இந்தியன் கவுன்ஸில் ...பார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் விளம்பரம் செய்திருந்தது. பி. எச். டி. தவிர தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையோடு பிரஞ்சு மொழிப் பயிற்சியில் டிப்ளோமோவும் தகுதிகளாகக் கேர்ரிக் குறிப்பிடப்பட்டிருந்தன. -

ரவியிடம் இந்த எல்லாத் தகுதிகளும் இருந்தன. ஒரு வருஷத்துக்கும் குறைவாகச் சென்னையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/14&oldid=579728" இலிருந்து மீள்விக்கப்பட்டது