பக்கம்:துளசி மாடம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 171


விசாரணைகளுக்கும் சர்மாவோ ரவியோ பதில் சொல்ல வேண்டியனவாக நேர்ந்தன.

"அங்கெல்லாம் ந ம் மோ ட கூட வர்ற ஒரு பெண்ணையோ ஆணையோ நாமாச் சொல்லி இன்னார்னு அறிமுகப் படுத்தலேன்னா எதிரே சந்திக் கிறவா யார்னே கேட்க மாட்டாப்பா..." ரவி தந்தை யிடம் சொன்னான். சர் மா சிரித்தபடி அதற்குப் பதில் சொன்னார்.

"மேற்கத்திய தேசங்களைப் பத்தி நீ சொல்றே ரவி, நம்ம தேசத்திலே ஒவ்வொரு சிசுவும் தொப்புள் கொடியை நீக்கின மறுநிமிஷத்திலேயே மத்தவாளையும் மத்தது களையும் பத்தி அறிஞ்சுக்கிற ஆவல்லேதான் உயிர் வாழறதுங்கறதை மறந்துடாதே."

அவர்கள் போய்ச் சேர்ந்தபோது இறைமுடிமணியின் புதுப் பலசரக்குக் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. மூன்று பக்கமும் செங்கல் சுவரெழுப்பி மேலே தகரக் கொட்டகையாக அமைத்து 'சுயமரியாதைப் பல் பண்ட கிலையம்'-என்று புதிதாகப் பளபளத்து மின்னும் போர்டு மாட்டியிருந்தார் இறைமுடிமணி. வாழைமரம் மாவிலைத் தோரணம் கிடையாது. போர்டிலோ கதவு களிலோ, முகப்பிலோ, எங்கும் குங்குமம், சந்தனப் பொட்டு எதுவும் இல்லை. போர்டிலும், கடைக்குள் பிரதானமாகப் பார்வையில் படும் இடத்திலும் இறை முடிமணியின் இயக்கத் தலைவராகவும் வழிகாட்டியாக வும் விளங்கிய ஐயா படம் இருந்தது. கல்லாப் பெட்டியில் குருசாமி, அதாவது இறைமுடிமணியின் மருமகன் உட்கார்ந்திருந்தான். முகப்பில் நின்று இறைமுடி.மணி வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். வருகிற வர்களை உட்கார வைப்பதற்காகப் பக்கத்துக்கு ஒன்று வீதம் கடை முகப்பின் இருபக்கமும் இரண்டு நீளப் பேஞ்சுகள் போடப்பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/173&oldid=579889" இலிருந்து மீள்விக்கப்பட்டது