பக்கம்:துளசி மாடம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 துளசி மாடம்


அவர்கள் மூவரும் வீடு திரும்பியதுமே சீமாவையரின் துஷ்பிரசார வலிமை சர்மாவுக்குத் தெரியும்படியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. ரவியும், கமலியும், சர்மாவும் வீட்டுப்படியேறி உள்ளே நுழைந்தபோதே திண்ணை யில் அக்ரஹாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் சர்மாவை எதிர்பார்த்துக் காத்திருந் தனர். சர்மா அப்படியே அவர்களை வரவேற்று முகமன் வார்த்தைகள் கூறி அவர்களோடு திண்ணையில் அமர்ந்து கொண்டார். ரவியும் கமலியும் அவர்களுக்கு ஊடே நடந்து அவர்களைக் கடந்துதான் வீட்டுக் குள்ளேயே செல்ல வேண்டியிருந்தது அப்போது.

- வந்திருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபோதே சர்மாவால் அவர்கள் எதற்கு

வந்திருக்கக்கூடும் என்பதைச் சுலபமாகவே அனு

மானித்துக் கொள்ள முடிந்தது.

பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம சபைக் காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஹரிஹர கனபாடிகள்தான் முதலில் ஆரம்பித்தார்.

"எப்போ அது பொதுச் சொத்துன்னு ஆச்சோ அப்போ நீர் பூர் மடத்துக்கு வேண்டியவா நாலு பேரைக் கலந்து பேசி -அக்ரஹாரத்து மனுஷாளே யாராவது கடைகிடை வச்சுப் பராமரிக்கத் தயாரா இருக்காளா, இல்லியான்னு முதல்லே தெரிஞ்சுண்டு அப்புறம் வெளியிலே வாடகைக்கு விட வேண்டாமோ?"

சர்மா பொறுமையாக இதற்குச் சமாதானம் சொன்னார். ஆனால் அப்போது அங்கு வந்திருந்த யாரும் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.

"ஒரு டெண்டர் நோட்டிஸ் ஒட்டி ஏலம் போட்டு

இன்னும் அதிக வாடகைக்கு விட்டிருக்கலாம். தெய்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/178&oldid=579894" இலிருந்து மீள்விக்கப்பட்டது