பக்கம்:துளசி மாடம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 துளசி மாடம்


மிகவும் வைதீகமான குடும்பங்கள், பழக்க வழக்கங்கள்நடை முறைகள் பற்றிப் புத்தகங்களில் படித்தும் ரவி யிடம் கேட்டும் கமலி நிறைய அறிந்திருந்தும், சில நுணுக்கமான சந்தேகங்கள் அவளுக்கு இன்னுமிருந்தன. அப்படிப்பட்டவற்றை அவள் வசந்தியிடம் இப்போது கேட்டறிந்தாள். அதில் ஒன்று மிகவும் நாசூக்கானது. வசந்தி அதற்குத் தெளிவாகவே பதில் சொன்னாள். கமலியை முன்னெச்சரிக்கை செய்தும் வைத்தாள்.

"அப்படி நாட்களில் இந்த வீட்டு வழக்கப்படி பின்னால் கொல்லைப் பக்கம் தனி அறை ஒண்ணு இருக்கு. அதிலே போய் இருந்துக்க வேண்டியதுதான். நிறையப் புஸ்தகம் எடுத்து வச்சுக்கோ, படி, குளிக்கிற நாள் வரவரை ஒரு ஜெயில் மாதிரிதான்னு வச்சுக் கோயேன்."

தான் காமாட்சியம்மாளுக்குத் திருப்தியாக நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒவ்வொன்றாய்த் தூண்டித் தூண்டி விசாரித்து அறிந்து கொண்டாள் கமலி. தான் அந்தி விளக்கு ஏற்றியதனால் காமாட்சி யம்மாள் செய்த சிறுபூசல், ரவியின் தந்தை தன்னிடம், ஒரு வருஷத்துக்கு மேல் இந்த வீட்டிலே இருக்க உனக்கு வசதிப்படுமா?' என்று தன்னைக் கேட்டது எல்லா வற்றையும் வசந்தியிடம் மனம் விட்டுச் சொல்லிய பின்பே ஒவ்வொன்றாக யோசனை கேட்டிருந்தாள் கமலி. -

ரொம்பச் சிரமமா இருந்தா எங்க வீட்டு மாடிக்குப் போயிடு. நான் அப்பாட்டச் சொல்லிட்டுப் போறேன்" என்று வசந்தி கூறியதற்குக் கமலி ஒப்புக் கொள்ள வில்லை. - -

"பார்க்கலாம். அத்ற்கு அவசியம் நேராது வசந்தீ!" என்றாள் கமலி. புத்தகத்தில் படித்துத் த்ெரிந்து கொண்டிருப்பதைத் தவிரப் பூஜை, ப்ன்ஸ்காரங்கள்

புற்றியும் வ சந்தி யிட ம் நிற்ையக் கேட்டறிந்து கொண்டாள். கமலி. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/180&oldid=579896" இலிருந்து மீள்விக்கப்பட்டது