பக்கம்:துளசி மாடம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 185


இறைமுடிமணி மட்டும், 'மனுசன் கொழுப்பெடுத் துப் போயிச் செய்யிற கெடுதல்களுக்கு எங்கேயோ எதையோ உண்டாக்கி ஏன் செய்யாத குத்தத்தை இல்லாத தும் மேலே போடறிங்க. திராணி இருந்தாத் தீ வச்சது யாருன்னு கண்டு பிடியுங்க. இல்லாட்டித் தலையிலே முட்டாக்குப் போட்டுக் கிட்டுப் போங்க"-என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ரவியும், இறைமுடிமணியும் சீமாவையர் மேல் சந்தேகப்பட்டார்கள். எல்லாரையும் போல் 9 шо т வையரும் நன்றாக விடிந்தபின் ரவியிடம் வந்து துக்கம் கேட்டுவிட்டு, "என்ன தெய்வக் குக்தமோ தெரியவே.இல்லேன்னா பிராம்மணன் வீட்டிலே பசுமாடும் துளசிச் செடியும் தீப்பிடிச்சு எரியுமோ '-என்று உருகிப் புலம்பி னார். சீமாவையரின் இந்த வார்த்தைகளில் இருந்த குறும்பும்-இந்த நிகழ்ச்சியைப் பற்றி இனிமேல் அவரும் அவருடைய கையாட்களும் எப்படிப் பிரச்சாரம் செய்வார்கள் என்பதும் சேர்ந்தே தெரிந்தன. ரவி அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவராக வந்தார்-பேசினார், போனார். தாம் வந்து கேட்கவில்லை என்று ஆகிவிடக் கூடாதே என்பதற் காகவே வந்து தலையைக் காட்டி விட்டுப்போன 'அவி.பி' மாதிரி இருந்தது அவரது வரவு.

ரவி சந்தேகப்பட்டது போலத்தான் நடந்தது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மடத்துச் சொத்தை நாஸ்திகனுக்கு வாடகைக்கு வி ட் டா ர் வீட்டிலே ஆசாரக் குறைவான மனுஷாளைச் சேர்த் துண்டார், தெய்வத்துக்கே பொறுக்கலே தீப்பிடிச்சுது!" என்கிற பாணியில் சீமாவையர் அக்கிரகாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். சிலரிடம் அந்தப் பிரச்சாரம் நன்கு எடுபடவும் செய்தது.

காமாட்சியம்மாள் கிளம்பிப் போனபின் ஒருநாள் கூட விட்டுப் போகாமல் அதிகாலையில் நீராடிச் சிரமப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/187&oldid=579903" இலிருந்து மீள்விக்கப்பட்டது