பக்கம்:துளசி மாடம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 துளசி மாடம்


மனசு துணிஞ்சு இனிமே இங்கே தங்கறது அம்மா?"ட என்று பாட்டி காமாட்சியம்மாளைக் கேட்டாள்.

'என்ன பண்றது பெரியம்மா? எனக்கும் சுத்தமாப் பூண்டோடு இதெல்லாம் பிடிக்கலே. நீங்களே இந்தப் பிராமணரைக் கேளுங்கோளேன்... அப்பவாவது இவருக்கு உறைக்கறதான்னு பார்க்கலாம்"-என்று காமாட்சியம்மாளிடமிருந்து பாட்டிக்குப் பதில் கிடைத் தது. காமாட்சியம்மாள் புரிந்து கொண்டிருந்தபடி, அந்த வீட்டில் சர்மா, ரவி, பார்வதி, குமார் எல்லாருமே. கமலியின் கட்சி. காமாட்சியம்மாள் மட்டும் இதிலே, தனியாகக் கமலியை எதிர்த்து வந்தாள் என்றாலும் தன் எதிர்ப்பை அவளால் வெளிக்காட்ட முடியாமலிருந்தது. இப்போது இந்தப் பெரியம்மாவின் வரவு அந்த எதிர்ப்பை வெளிக்காட்டப் பயன்பட்டது. பாட்டிகளுக்கே உரிய நச்சரிப்புக் குணத்தோடு ரவியிடம், குமாரிடம், பார்வதி யிடம் என்று ஒவ்வொருவரிடமாக இதைக் கிளப்பிப் பார்த்தாள் அந்தப் பாட்டி. அந்த வீட்டில் காமாட்சி யம்மாளைத் தவிர வேறு யாரும் கமலி விஷயமாகப் பாட்டியிடம் பிடிகொடுத்துப் பேசவே இல்லை. கடைசி யாகச் சர்மாவிடமே கேட்டாள் பாட்டி. அதையும் வீட்டில் வைத்துக் கேட்காமல் சிவன் கோவில் ரிஷப வாகனப் புறப்பாட்டின்போது கோவில் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் சர்மாவிடம் இதைக் கேட்டாள் பாட்டி. -

எல்லாச் சாஸ்திரமும் தெரிஞ்சவாளே இப்பிடிப் பண்ணினா என்ன செய்யறது ? இந்தக் கட்டைலேபோற. வயசுலே எ ன க் கு இப்படியெல்லாம் தீட்டுப் படனுமோ ?"- - - -

"அவளாலே உங்களுக்கு ஒரு தீட்டும் வந்துடாது. இந்த ஆசார அனுஷ்டானங்களைப் பொறுத்தவரை அவ. நம்மை எல்லாம் விடப் பூடு சுத்தம்! கவலைப்படாம நீங்க பாட்டுக்கு இருங்கோ..." என்றார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/200&oldid=579916" இலிருந்து மீள்விக்கப்பட்டது