பக்கம்:துளசி மாடம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 துளசி மாடம்


"வேறே யாரும் பொம்மனாட்டிகள் முன்வரத் தயங்கினதாலே அவர் என்னைக் கூப்பிட்டுக் கமலிக்கு மாலை போடச் சொன்னார். போட்டேன்."

தடி மாடா வளர்ந்திருக்கிற, அத்தனை பெரிய வயசு வந்த பொண்ணுக்கு நாலுபேர் முன்னாடி மாலை போடுன்னு ஒருத்தன் சொன்னா நீ போடலாமோ ?"

"போட்டா என்ன தப்பு அம்மா ?”

போடா...உங்கிட்டே பேசிப் பிரயோஜனமில்லை. விதண்டாவாதம் பேசியே பழக்கமாப் போச்சுடா நோக்கு."

அதுதான் சமயமென்று ரவி அம்மாவிடமிருந்து நழுவினான்.

இது நடந்து இரண்டு மூன்று நாள் கழித்துப் பகல் பன்னிரண்டு மணிக்குத் தபாலில் அந்த வீட்டுக்கு இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று சர்மாவின் பெயருக்கும் மற்றொன்று கமலியின் .ெ ட ய ரு க் கு ம் இருந்தன. சர்மாவும், கமலியும், கையெழுத்துப் போட்டுத் தங்கள் தங்கள் பெயருக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை வாங்கினார்கள். சர்மாவுக்குத் தன் பெயரில் பதிவுத் தபால் வந்தது ஆச்சரியமாயில்லை. கமலிக்கு யார் ரிஜிஸ்தர் கடிதம் அனுப்பியிருக்கக்கூடும் என்பதுதான் மிகப் பெரிய புதிரா யிருந்தது. . .

20

தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத் தைப் பார்த்துச் சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து ஆறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்க்ார்ந்திருந்: இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/206&oldid=579922" இலிருந்து மீள்விக்கப்பட்டது